Switch Language:   English | தமிழ்

    சுற்றுலாச் செல்வது ஒரு கலை. இன்பப் பொழுதுபோக்குடன் ஏற்ற மிகு பயனையும் தரவல்லது அது. நாம் கிணற்றுத் தவளைகளாக ஓரிடத்தில் மட்டும் வாழ்தல் கூடாது. பல்வேறு இடங்களுக்கு செல்வதும், பல்வேறு மக்களை காண்பதும் நமது அறிவை விருத்தி செய்து கொள்ள உதவும். புதிய புதிய அனுபவங்களை பெற்றிட முடியும். இன்று அறிவியல் வளர்ச்சியின் காரணமாக உலகம் பெரிதும் சுருங்கி விட்டது. இதனால் உலக மக்கள் அனைவரதும் வாழ்க்கை முறைகளை, பண்பாடுகளை நாம் அறிந்து கொள்ள சுற்றுலா பெரிதும் பயன்படும்.

    'தர்மம் தலை காக்கும்' என்பது மூத்தோர் வாக்கு. நாம் செய்யும் தானதர்மங்கள் எம்மை என்றும் காத்து வாழ வைக்கும் என்பது இதன் கருத்து. ஆம்! எமக்கு கிடைக்கும் செல்வங்களில் ஒரு பகுதியை நாம் இல்லாதவர்களுக்கு கொடுக்கவென ஒதுக்க வேண்டும். எமது தேவைகளில் அத்தியவசியமானவற்றை நிச்சயமாக பூர்த்தி செய்யத்தான் வேண்டும். ஆனால் எமது ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொண்டு, அத்தியவசியமான தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்ய முடியாது தவிக்கும் எமது சமூக அங்கத்தவர்களுக்கு நாம் வழங்க வேண்டும்.

    'அன்புதான் இன்ப ஊற்று
    அன்புதான் உலகமகா சக்தி
    அன்புதான் உலக ஜோதி' என்று கூறுவர்.

    ஆம்! இந்த உலகில் பிறந்தவர்கள், வாழும் குறுகிய காலத்தினுள் எல்லோரிடத்திலும் அன்பு காட்டி, அன்பாக நடந்து அவர்களது அன்பையும் பெற்று பேரானந்தம் அடையலாம்.

    கல்லையும் கல்லையும் உரசி தீயைக் கண்டு பிடித்ததிலிருந்தே மனிதனின் கண்டுபிடிப்புக்கள் ஆரம்பித்தன. அன்றிலிருந்து இன்றுவரை விஞ்ஞானம் வானளாவிய ரீதியில் வளர்ந்து விண்ணிற்கும் மண்ணிற்கும் இடையே விந்தைகள் செய்து கொண்டிருக்கின்றது.

    விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் இன்று எமக்கு எவ்வளவு நன்மைகள் ஏற்பட்டுள்ளன. மனிதன் கருவிலே தோன்றிய காலத்திலிருந்து அவனது ஆயுள் முடிந்த பின்பும் விஞ்ஞானத்தின் பணி தொடர்வதைக் காண்கிறோம்.

    நாம் வாழும் சூழல் இன்று பல வழிகளாலும் அழுக்காகின்றது, மாசடைகின்றது. இதனால் எமது சுத்தமும், சுகாதாரமும் கெட்டுப் போகின்றன. "சுத்தம் சுகம் தரும்". எனவே எமது சூழலைப் பாதுகாப்பதும், எம் சுத்தத்தைப் பேணி எம் சுகத்தைப் பேணவேண்டியதும் எமது ஒவ்வொருவரதும் கடமையாகும்.