Switch Language:   English | தமிழ்

    சில நாளில் தோன்றிச் சில நாளிருந்து சிலநாளில் மறைந்து போவதாகிய இம் மக்களுடம்பில் பிறந்த நாம் எந்த வகையான செல்வத்தை பெறுவதற்கு முயலல் வேண்டுமென்றால் நம் உடம்பு அழிந்தாலும் நமது உயிரோடு சேர்ந்து நம்மை எல்லாப் பிறப்புக்களிலும் தொடர்ந்து வருவதாய் உள்ள அழிவில்லாப் பெருஞ்செல்வமாகிய கல்விச் செல்வத்தையே அடைவதற்குக் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும். கல்வியானது வௌ்ளத்தால் அழியாது; வெந்தழலால் வேகாது; கள்வர்களால் கொள்ளையடிக்க முடியாது; கொடுக்க கொடுக்கப் பெருகுமே தவிர குறையாது; பாதுகாப்பும் எளிது.

    வாழ்க்கை முழுவதும் ஒரு மனிதன் கற்றுக்கொண்டே இருக்கிறான்.தினம் தினம் புது புது விடயங்களை ஒவ்வொரு மனிதனும் அறிய வேண்டியுள்ளது. 'நாம் கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு’ என்ற யதார்த்தத்தை நாம் எல்லோரும் புரிந்து கொண்டிருக்கிறோம். இதன் படி நாம் கற்க வேண்டியது ஏராளம்.ஆகவே வாழ் நாள் முழுவதும் நாம் கற்பதற்கு வாசிப்புப் பழக்கம் மிக மிக அவசியமாகின்றது.

    விஞ்ஞான வளர்ச்சி காரணமாக இன்று உலகின் எந்த மூலையில் இருக்கும் ஒருவரை அடுத்த சில வினாடிகளில் செல்போனில் தொடர்பு கொள்ளலாம். அந்த அளவுக்கு செல்போன் சேவை இன்றைய சூழலில் அத்தியாவசியமான ஒன்றாக மாறி விட்டது.

    விஞ்ஞான வளர்ச்சியால் இணையதளம், செல்போன் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்று என்பது மறுக்கப்படாத உண்மை. இணைய தளமோ, செல்போன் சேவையோ ஒருசில நிமிடங்கள் பாதிக்கப்பட்டால் ஏதோ உலகமே துண்டிக்கப்பட்டது போன்ற உணர்வு.