உலகத்தை வியக்க வைத்துள்ள காதல் ஜோடி!
- Editor
- Category: வியப்பு
- Hits: 533
உலகளாவிய ரீதியில் பலரின் பார்வையை குள்ளமான ஜோடி ஒன்று தம்பக்கம் திருப்பியுள்ளனர்.
பிறேசிலை சேர்ந்த குள்ளமான இருவர் காதலித்து திருமணம் செய்துள்ளதுடன், மிகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வருகின்றனர்.
30 வயதான Paulo என்பவர், 26 வயதான Katyucia எனும் பெண்ணையே திருமணம் செய்துள்ளார். இவர்களின் உயரம் முறையே, 88.5 மற்றும் 89.5 ஆகும்.
Paulo சட்டத்தரணியாக கடமையாற்றுகிறார். Katyucia அழகு சிசிக்சை நிலையம் ஒன்றை நடத்தி வருகிறது. அழகு நிலையத்தை தனது உயரத்திற்கு ஏற்றவாறு அமைத்துள்ளமை சிறப்பம்சம்.
இவர்கள் இருவரும் உலகின் மிகவும் குள்ளமான ஜோடி என உலக சாதனை படைத்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 8 வருடங்கள் இணைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இருவரும் ஒருவருக்கு ஒருவர் உதவும் மனநிலையை கொண்டுள்ளனர். அவர்கள் இருவரும் சாதாரண ஜோடிகளை போலவே உள்ளனர். அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
தங்களின் வாழ்க்கை குறித்து காதல் தம்பதிகள் கருத்து வெளியிடுகையில்,
உலகின் மிகவும் குள்ளமான ஜோடி நாங்கள் தான் என நான் நினைக்கின்றேன். தங்களுக்கு இடையில் உள்ள நெருக்கமே தங்கள் உறவின் முக்கிய விடயமாகும் என Katyucia தெரிவித்துள்ளார்.
தங்கள் எண்ணங்கள், சிந்தனைகள் மற்றும் உணர்வுகள் ஒத்து போவதாகவும் அது சிறப்பான ஒரு விடயமாக உள்ளதென தான் நினைப்பதாக Paulo குறிப்பிட்டுள்ளார்.