நீங்கள் பணிபுரியும் இடத்தை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது எவ்வாறு?
- admin
- Category: ஆலோசனை
- Hits: 115
நாம் ஒரு நிறுவனத்தில் தலைமை பொறுப்பிலோ அல்லது சக ஊழியர்களில் ஒருவராகவோ இருக்கலாம். ஆனால், உங்கள் தொழில் வாழ்க்கையை சிறப்பாக அமைய வேண்டுமெனில் நாம் பணிபுரியும் சூழலானது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
நாம் பணிபுரியும் இடத்தை எவ்வாறு மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான சில வழிமுறைகளை பற்றி இன்று அறிந்துக் கொள்வோம்.
மென் திறன்கள் பற்றிய தகவல்கள்! கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டியவைகள்
- admin
- Category: ஆலோசனை
- Hits: 201
ஒருவரின் ஆளுமைத் தன்மையை தீர்மானிப்பதில் மென் திறன்கள் (சாப்ட் ஸ்கில்) முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஏனெனில், ஒருவரின் எண்ணங்களுடன் இந்த மென் திறன்கள் நேரடியாகத் தொடர்புடையது. ஆகையால், மேலாளர்கள் நேர்காணலில் ஒருவரை தேர்வு செய்வதற்கு முன்பு இந்த மென் திறன்களை விண்ணப்பதாரர் பெற்றிருக்கிறாரா என்பதை அறிந்து கொள்வதில் முனைப்பு காட்டுகிறார்கள். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மென் திறன்கள் என்ன என்பதை பற்றி இன்று அறிந்துக் கொள்வோம்.
உங்கள் வாழ்வை வளமாக்கும் திறன்கள் !
- admin
- Category: ஆலோசனை
- Hits: 128
நாம் நினைத்த வேலையை பெறுவதற்காக எண்ணற்றத் திறன்களை வளர்த்துக் கொள்கிறோம். ஆனால், இந்த திறன்கள் நமது தொழில் வாழ்க்கையை மட்டும் அல்லாது நமது தனிப்பட்ட வாழ்க்கையையும் வளமாக்க கூடியவை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், அந்த திறன்களை பற்றி இன்று அறிந்துக் கொள்வோம்.
நிர்வாகத் திறன்:
அலுவலகத்தில் இருக்கும் வேலைகளை நிர்வகிப்பது போல நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் அவர்களது செயல்பாடுகளையும் நிர்வகிப்பதற்கு நாம் நன்றாக கற்றுக் கொள்ள வேண்டும்.
வாசித்தல் மற்றும் எழுதுதல் திறன்:
நமது தொழில் வாழ்க்கைக்கு உதவும் புத்தகங்களை மட்டும் படிப்பதோடு இல்லாமல் பொது அறிவை வளர்க்கக் கூடிய புத்தகங்களையும் படிக்க வேண்டும். நமது எண்ணங்களை வெளிப்படுத்த உதவும் மொழியில், நன்றாக வாசிக்கவும் எழுதவும் கற்றுக் கொள்ள வேண்டும்.
மனக்கணக்கு திறன்:
மனக்கணக்கு திறன் என்பது நமது முன்னோர்களிடம் இருந்து நாம் கற்க மறந்த பல விஷயங்களுள் ஒன்றாகும். இது நாம் பயின்ற பாடக் கணக்கிலிருந்து முற்றிலும் மாறுப்பட்டதாகும். எனவே இந்த திறனை வளர்த்துக் கொள்வது நமது தொழில் வாழ்க்கைக்கும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இன்றியமையாததாகும்.
உரையாடல் திறன்கள்:
நாம் பேசும்பொழுது பயன்படுத்தும் வார்த்தைகளில் அதிக கவனம் இருக்க வேண்டும். அது மட்டுமின்றி நமது எண்ணங்களையும் கருத்துக்களையும் பிறரிடம் தெளிவாக வெளிப்படுத்துவதில் இந்த திறன் முக்கியப் பங்காற்றுகிறது. எனவே இத்தகையத் திறனை வளர்த்துக் கொள்வது மிக அவசியமாகும்.
தோல்வியிலிருந்து கற்றல்:
நமது வாழ்க்கையில் பல தோல்விகளை சந்திக்க நேரிடலாம். ஆனால் அந்த தோல்வியில் இருந்து மீண்டு எழுவதற்கு, தன்னம்பிக்கையுடன் போராடவும் கற்றுக் கொள்ள வேண்டும். மேலும், தோல்விக்கான காரணங்களை கண்டறிந்து அவற்றை சரி செய்துக் கொள்ள வேண்டும். இந்த செயல் முறையே வெற்றிக்கான வழியை வகுக்கும்.
நல்ல நடத்தை முறைகள்:
அலுவலகங்களிலும் சரி, வீட்டிலும் சரி நல்ல பழக்க வழக்கங்களை பின்பற்ற வேண்டும். தெரிந்த நபர்களைக் கண்டால் புன்னகைப்பது, அலுவலகங்களில் வாடிக்கையாளருடன் முறையாக கைக் குலுக்குவது, உறவினர்கள், நண்பர்களுடன் நன்றாக சிரித்துப் பேசி பழகுவது உள்ளிட்ட பல நல்ல பழக்கங்களை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
முயற்சி செய்தால் அனைத்தும் சாத்தியமே. ஆகையால், உங்களால் முடிந்த வரை முயற்சி செய்யுங்கள். அனைத்து திறன்களையும் கற்றுக் கொண்டு உங்கள் வாழ்க்கையை வளமாக்குங்கள்.
தலைமைப்பண்பின் அவசியமும் அவற்றை வளர்த்துக் கொள்ளும் வழிமுறைகளும்!
- admin
- Category: ஆலோசனை
- Hits: 107
தலைமைப் பண்பு என்பது பிறரை வழிநடத்துவதும் ஆளுவதும் மட்டும் இல்லை. நம் வாழ்க்கையில் ஏற்படும் சாதகமற்ற சூழல்களில் வரும் பிரச்சனைகளை எதிர்கொள்ள நமக்கு தேவையான தெளிவையும் மனத்திடத்தையும் அளிப்பதுதான் உண்மையான தமைமைப்பண்பு ஆகும்.
ஆளுமைத்திறன் என்றால் என்ன? அதை வளர்ப்பதற்கான அடிப்படை விஷயங்கள் எவை?
- admin
- Category: ஆலோசனை
- Hits: 94
ஒருவனின் ஆளுமைத்திறன் அவனது வாழ்க்கையையே மாற்றி அமைக்க வல்லது. அத்தகைய ஆளுமைத்திறனை வளர்த்துக் கொள்வதற்கு அடிப்படையாக நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய விஷயங்களைப் பற்றி இன்று அறிந்துக் கொள்வோம்.
Page 5 of 23