அலுவலக டென்ஷனை குறைக்க உதவும் வழிமுறைகள்
- admin
- Category: ஆலோசனை
- Hits: 108
அலுவலகத்திற்கு செல்லும் பலருக்கு அதிகமான வேலைப்பளு இருப்பதால் மனஅழுத்தம் ஏற்படுகிறது. இந்த வேலைப்பளுவால் மனமானது சோர்வடைந்து உடல்நலத்தையும் பாதிக்கிறது. அது மட்டுமின்றி, எந்த ஒரு செயலையும் சரியாக செய்ய முடியாமலும் மற்றும் நம்மைச் சார்ந்தவர்கள் மீது சில சமயங்களில் வெறுப்பையும் காண்பிக்க வைக்கிறது.
மேலும், இந்த மன அழுத்தமானது சுவையில்லாத உணவுகள், உடன் பணிபுரிவோரில் சிலரின் எரிச்சலூட்டும் செயல்கள், எதற்கு எடுத்தாலும் குறை கூறும் முதலாளி போன்றவற்றாலும் நமது மன அழுத்தம் அதிகரிக்கிறது.
ஆகவே அலுவலகத்தில் எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும் செய்யும் வேலையை விரும்பி செய்தால் நிச்சயம், மன அழுத்தம் என்பதே இருக்காது.
இத்தகைய மோசமான மன அழுத்தத்தில் இருந்து வெளிபட சில எளிய வழி முறைகளை இன்று தெரிந்துக் கொள்வோம்.
ஆழ்ந்து சுவாசித்தல் :
உங்களுக்கு டென்ஷன் ஏற்பட்டால், உங்களது கண்களை சிறிது நேரம் மூடி ஆழ்ந்து சுவாசிக்க வேண்டும். இதனால் நமது மனம் அமைதி அடைந்து, உணர்ச்சி வசப்படாமல் கட்டுபாடுடன் வைத்துக் கொள்ள முடியும். அதுமட்டுமின்றி, டென்ஷனில் எடுக்கப்படும் சில தவறான முடிவுகளைத் தவிர்த்துவிடலாம்.
அமைதியாக இருத்தல் :
அலுவலகத்தில் வேலை அதிகமாக இருக்கும்பொழுது, நாம் வேலையை விரைவில் முடிக்க வேண்டுமென்று என்பதற்காக பரப்பரபாக ஒருவிதப் பதற்றத்துடன் வேலையை செய்ய ஆரம்பிப்போம். இது தவறு!
எவ்வளவு வேலை இருந்தாலும், மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
சிரிப்பு :
நன்றாக சிரிக்கும் பொழுது நமது மனம் அமைதி அடைந்து புத்துணர்வு பெறுகிறது. ஆகையால், மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு நன்கு சிரிக்க வேண்டும்.
அதற்கு காமெடி காட்சிகள், புத்துணர்வு ஊட்டும் பாடல்கள் அல்லது பிடித்த வீடியோ/காணொளி காட்சிகளை பார்ப்பது நம்மை மன அழுத்தத்தில் இருந்து விடுவித்துவிடும்.
காபி குடிக்கலாமா?
நாம் அனைவரும் காபி குடித்தால் டென்ஷன் குறைந்து விடும் என்று எண்ணுகிறோம். அதனால் அடிக்கடி காபி குடிக்கிறோம். ஆனால், உண்மையில் காபி குடிப்பதனால் டென்ஷன் தான் அதிகரிக்கும்.
ஏனெனில் காபியில் உள்ள caffeine மனதை அமைதிப்படுத்த உதவும் Adenosine-யை குறைக்கிறது. ஆகவே காபியை அதிகமாக குடிப்பதை தவிர்த்துவிடுங்கள்.
தியானம் :
தியானமானது உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரித்து மனதை அமைதியடைய செய்கிறது.
எனவே, மனம் அமைதி இழந்து இருக்கும் போது தியானம் செய்தால் மனம் மட்டுமின்றி, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
நல்ல உணவுகள் :
பாதாம், ஆரஞ்சு, ப்ள பெர்ரி போன்ற சில நல்ல உணவுகள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் உணவுப் பொருட்களாகும். அத்தகைய உணவுகளை டென்ஷனாக இருக்கும் போது சாப்பிடுவதனால் மனதை அமைதிப்படுத்திவிடுகிறது.
அது மட்டுமின்றி, மன அழுத்தத்தை குறைப்பதில் வைட்டமின் சி உதவியாக இருப்பதனால், வேலை செய்யும் போது வைட்டமின் சி நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.
தண்ணீர் :
டென்ஷன் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க தண்ணீரை அடிக்கடி குடிக்க வேண்டும். இதனால் சோர்வடைந்துள்ள தசைகளை நீரானது அமைதியடையச் செய்வதோடு, மனதையும் அமைதிப்படுத்தும்.