கணினியின் வேகம் ஏன் குறைகிறது?
- Editor
- Category: கணனி
- Hits: 385
கணினியின் டெஸ்க்டாப்பில் நிறைய போல்டர்கள் இருக்கும் பட்சத்தில் கணினி இயங்குவதில் வேகம் நிச்சயம் குறையும்.
கேச்சி (Cache)
கணினி வேகமாக இயங்க கேச்சி பயனபட்டாலும் அவை அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதுவே கணினியின் வேகம் குறையவும் காரணமாக அமையும், இன்டர்நெட் பயன்படுத்தும் போது சீரான இடைவெளியில் கேச்சிக்களை அழிப்பது அவசியமாகும்.
மென்பொருள்:
கணினியில் பழைய மென்பொருள் இருப்பதும் அதன் வேகம் குறைய காரணாக இருக்கலாம்.
அப்ளிகேஷன்:
தேவையில்லாத அல்லது பயன்படுத்தாத அப்ளிகேஷன்களை கணினியில் வைத்திருப்பது கணினியின் வேகம் குறைய காரணமாகும்.
குறைந்த காலியிடம்:
ஹார்டு டிஸ்க் எப்பவும் 10 சதவீதம் காலியாக இருக்க வேண்டும், இந்த அளவு குறையும் போது கணினியின் வேகம் நிச்சயம் குறையும். ப்ராக்மென்ட்ஸ் ஹார்டு டிஸ்க்களை சீரான இடைவெளியில் டீப்ராக்மென்ட் செய்ய வேண்டும்.
தற்காலிக நினைவகம்:
கணினியின் வேகத்தை தீரமானிப்பதில் ரேம் அதிக பங்கு வகிக்கின்றது, ஆதலால் பிரசாஸருக்கு ஏற்ற ரேம் கணினியில் இருக்க வேண்டும்.
எழுத்துரு (Font):
இன்டர்நெட்டில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படும் ஃபான்ட்கள் அனைத்தும் நல்லதாக இருக்காது, சில ஃபான்ட்கள் கணினிக்கு பிரச்சனையை உண்டாக்கலாம்.
பிராசசஸ் (Processor)
கணினியின் சிபியு சரியாக இயங்குகின்றதா என்பதை சரி பார்க்க வேண்டும், சில சமயங்களில் தேவையில்லாத ப்ரோகிராம்கள் இயங்கி கொண்டிருக்கும், இந்த நிலையில் ஸ்டார்ட் அப் ஐடம்களை எடிட் செய்தால் கணினியின் வேகம் அதிகரிக்கும்.
இதெல்லாம் சரியாக இருந்தால் கணினி நன்றாக இயங்கும்.