Switch Language:   English | தமிழ்

    அறிவாற்றல் உடைய கணனி (cognitive computing) தொழிநுட்ப துறையில் புதிய பரிணாமமாக மனித மூளையின் செயற்பாடுகளை ஒத்த முன்மாதிரி 'சிப்' இனை உருவாக்கியுள்ளதாக ஐ.பி.எம் நிறுவனம் அறிவித்துள்ளது

     

    சவுத்ஹம்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சிறிய கண்ணாடி டிஸ்க்கினை சுமார் 260 ஜிபி வரையான தரவுகளை சேமிக்ககூடியதாக மாற்றி சாதனை படைத்துள்ளனர்.

    இக் கண்ணாடி டிஸ்க்கானது நீண்ட கால பாவனைக்கு உகந்ததெனவும், 1000 பாகை செல்சியஸ் வரை வெப்பத்தினைத் தாங்கக்கூடியதுமாகும். 'மெம்டோ பிரிண்டிங்' என்ற குறுகிய லேசர் பல்ஸ்களைப் பயன்படுத்தும் முறையின் மூலமே இதில் தரவுகள் பதியப்படவுள்ளன.

    உங்கள் வயதைக் கேட்டால் சொல்லிவிடலாம். மிக எளிது. உங்கள் மூளையின் வயது என்ன? என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? மூளைக்கும் நம் வயது தானே என்று எண்ணுகிறீர்களா? அதுதான் இல்லை.

    மூளைக்கு வயது அதன் செயல் திறனைப் பொறுத்து உள்ளது. உடல் வளர்ந்து தளர்ந்தாலும், மூளை செயல்படுவதைப் பொறுத்து தளர்வதில்லை.

    2013ஆம் ஆண்டு முதல் ஆகாயத்தில் பறந்தபடி பூமியையும், தினமும் உதிக்கும் சூரியனின் அழகையும் பார்த்து ரசிக்க முடியும்.

    பூமிக்கு மேல் தொங்கி கொண்டு உலக காட்சிகளை பார்ப்பது என்பது நம்மை சிலிர்க்க வைக்கும் சாகசமாக இருக்கும். இந்த வித்தியாசமான பயணத்திற்கு ஆகும் செலவு 5 மணி நேரத்திற்கு 90 ஆயிரம் பவுண்ட் என கணக்கிடப்பட்டுள்ளது.

    விண்வெளியின் முதல் ஹோட்டலை அமைக்கப்போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இந்த விண்வெளி ஹோட்டலுக்கு தி கமர்ஷியல் ஸ்பேஸ் ஸ்டேஷன் என்று பெயரிட்டுள்ளது ரஷ்யா. இந்த ஹோட்டல் வரும் 2016-ம் ஆண்டு திறக்கப்படும். பூமியில் இருந்து சுமார் 217 மைல் தொலைவில் மிதக்கும் இந்த ஹோட்டலில் 4 அறைகள் இருக்கும். அதில் 7 பேர் வரை தங்கலாம்.  விண்வெளி ஹோட்டலில் இருந்து பூமியைப் பார்க்கும் வகையில் அதில் வசதி செய்யப்படும்.