Switch Language:   English | தமிழ்

    சமூகத்தின் எழுச்சி அதன் கல்வி முன்னேற்றத்திலே தங்கியிருக்கின்றது. அப்படியானால், சமூகத்தில் கற்றவர்கள் என்று பெருமை பாராட்டித்திரியும் நாங்கள் எத்தனை கற்றவர்களை உருவாக்க வழிவகை செய்திருக்கின்றோம். சமூகம் முன்னேர வேண்டும் அதில் கற்றவர்கள் அதிகம் இருக்க வேண்டும் என்று கூறுகின்ற நாம் சமூகம் தலை நிமர்ந்து நிற்க எவ்வழியையும் எதிர்கால சந்ததியினருக்கு காட்ட மறுக்கின்றோம்.

    உலக முழுவதும் ஓக்டோபர் 10 ஆம் திகதி உலக உளநல நாள் கொண்டாடப்படுகின்றது. இம்முறை இதன் தொனிப்பொருளாக உளபிளவை நோய்குள்ளானவர்களை சமூகத்துடன் இணைத்து வாழ்வோம் என வரையறுக்கப்பட்டுள்ளது.

    பிள்ளைகள் குழந்தைகளாய் இருக்கும் போது, அவர்களைப் பார்த்துக் கொள்வது சுலபமல்ல; என்றாலும், பசி தூக்கம் பார்த்து கவனித்து விட்டால், விளையாடிக்  கொண்டிருப்பார்கள்.

    கவலைகள், பதற்றம், பயங்கள் ஆகியவை ஏற்பட ஏதும் ஒரு சம்பவம் தூண்டுதலாக அமைகிறது. நாம் அந்தச் சம்பவத்தை மறக்கும் வரை அவை நம் எண்ணத்தையும், செயல்களையும் பல மணி நேரத்திற்கு, ஏன் சில நாட்களுக்குக்கூட ஆக்கிரமிக்கின்றன. இந்த உணர்வுகள் தவறான, பொருத்தமில்லாத ஞாபகங்கள், எதிர்பார்ப்புகள், தகவல்களை வைத்து உருவாகின்றன. நம் இயல்பான வெளிப்பாடு பாதிக்காமல் நம் உணர்வுகளின் மீதும் சூழலின் மீதும் கட்டுப்பாட்டை மீட்க முடியும்.

    பரீட்சை காலத்தில் மாணவர்கள் மத்தியில் ஏற்படுகின்ற பரீட்சை பற்றிய பீதி (Test Phobia) காரணமாக, அவர்கள் பாடத்தில் அதிக தேர்ச்சியை பெற்றிருந்த போதும் பரீட்சையில் உயர்ந்த புள்ளியை பெற்றுக் கொள்வதில்லை.