Switch Language:   English | தமிழ்

    கவலைகளிலிருந்தும் பதற்றங்களிலிருந்தும் விடுபட சில குறிப்புகள்

    கவலைகள், பதற்றம், பயங்கள் ஆகியவை ஏற்பட ஏதும் ஒரு சம்பவம் தூண்டுதலாக அமைகிறது. நாம் அந்தச் சம்பவத்தை மறக்கும் வரை அவை நம் எண்ணத்தையும், செயல்களையும் பல மணி நேரத்திற்கு, ஏன் சில நாட்களுக்குக்கூட ஆக்கிரமிக்கின்றன. இந்த உணர்வுகள் தவறான, பொருத்தமில்லாத ஞாபகங்கள், எதிர்பார்ப்புகள், தகவல்களை வைத்து உருவாகின்றன. நம் இயல்பான வெளிப்பாடு பாதிக்காமல் நம் உணர்வுகளின் மீதும் சூழலின் மீதும் கட்டுப்பாட்டை மீட்க முடியும்.

    கவலைகளிலிருந்தும் பதற்றங்களிலிருந்தும் விடுபட சில குறிப்புகள்:

    01. பதற்றத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து அதைப் போக்க முயலுங்கள்.
    02. கவலையும் பதற்றமும் கடுமையான, உண்மையல்லாத  சுயவிமர்சனத்திலிருந்தே ஏற்படுகின்றன. உங்களைக் கவலைப்படுத்தும் பிரச்னைக்கு அறிவுபூர்வமான தீர்வை யோசியுங்கள்.
    03. உங்கள் பயங்களையும் கவலைகளையும் தெளிவான வார்த்தைகளாக மாற்றுங்கள்.
    04. உங்கள் கவலைகளை இரண்டாகப் பிரியுங்கள்: உங்களால் மாற்றக்கூடியது,மாற்ற முடியாதது.
    05. உங்களால் மாற்றக்கூடிய கவலைகளின் மீது கவனம் செலுத்துங்கள். மற்றவற்றை விட்டுவிடுங்கள்.

    கவலையாகவோ, பதற்றமாகவோ உணரும்போது பின்வருமாறு ஆசுவாசப்படுத்திக்கொள்ளலாம்.

    01. ஆழமாக, மெதுவாக மூச்சு விடுதல் மற்றும்
    02. எளிய உடற் பயிற்சிகளைச் செய்தல்

    உங்களுடைய செயல்களால், உங்கள் கவலைகளின் அழுத்தத்தைக் குறைக்க முடியவில்லையென்றால் ஒரு புரொஃபஷனலான   உளவள ஆலோசகரைச் சந்திப்பதைப் பற்றி யோசியுங்கள். நல்ல ஆலோசகரால் உங்கள் பதற்றத்தை அடையாளம் கண்டு, மீட்க முடியும்.

    உங்களுக்கு இறை நம்பிக்கை இருந்தால், உங்களால் மாற்ற முடியாததை ஏற்றுக்கொள்வதற்கான தைரியத்தைக் கேளுங்கள். மாற்றக் கூடியதை மாற்றுவதற்கான துணிச்சலைக் கேளுங்கள். இரண்டையும் வித்தியாசப்படுத்திப் பார்க்கும் அறிவைக் கேளுங்கள்.

    >உளவள ஆலோசகர்:றினோஸ் ஹனீபா