Switch Language:   English | தமிழ்

    உடல் நோயுறுவது போல் உளமும் நோய்வாய்ப்படும் தன்மையுள்ளது

    உலக முழுவதும் ஓக்டோபர் 10 ஆம் திகதி உலக உளநல நாள் கொண்டாடப்படுகின்றது. இம்முறை இதன் தொனிப்பொருளாக உளபிளவை நோய்குள்ளானவர்களை சமூகத்துடன் இணைத்து வாழ்வோம் என வரையறுக்கப்பட்டுள்ளது.

    ஆரோக்கியமான வாழ்வுக்கு உடல் நலத்தை போல மனநலமும் முக்கியம் உலகில் 35 கோடி பேர், மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக வாழ்கின்றனர் என்று ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. ஆரோக்கியமாக வாழ்தல் என்பதில் உடல் மட்டும் நோயற்று இருப்பதில்லை. மனமும் நோயற்று இருக்க வேண்டும் என்பதுடன் குடும்பம், சமூகம் அத்தோடு ஆன்மீகமும் நன் நிலையில் இருப்பதையே ஆரோக்கியமாக வாழ்தல் என குறிப்பிடப்படுகின்றது.

    உடல் நோயுறுவது போல் உளமும் நோய்வாய்ப்படும் தன்மையுள்ளது. உடல் உள நோய்கள் இரண்டும் ஒன்றாகத் தோன்றும் சந்தர்பங்கள் அதிகமாக காணப்படுகின்றன. அன்றாட வாழ்வில் பிரச்சினைகளால் எழும் துன்பதுயரங்களில் இருந்து மீண்டு வாழ உளநலன் அனைவருக்கும் இன்றியமையாததாக அமைந்திருக்கின்றது.

    முன்னைய காலங்களில் தொற்று நோய்களுக்கு எதிராக போராடிய மருத்துவ உலகம் இன்று உளநோய்களுக்கு எதிராகவும் போராட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.

    உளநோய்கள் பொதுவாக மையநரம்புத் தொகுதியை மையமாக வைத்தே ஏற்படுகின்றன உதாரணமாக உளபிளவை நோய் இது பாரிய உள நோயாகும். சனத்தொகையில் 2 வீதமானவர்கள் இந்நோயுடன் வாழ்வதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்நோயாளியின் சிந்தனைகள், பேச்சுவழக்கு, பார்வை, உணர்வுகளை உணர்ந்துகொள்ளும் விதம் மாறுபட்டவையாகவும், மாயமான தோற்றங்களை காண்பவையாகவும் அமையும்.

    பெரும்பாலும் கட்டிளமைப்பருவத்தில் இந்நோய் ஏற்படலாம். இவ்வாரான நோயாளர்களை சமூகத்துடன் இணைத்து வாழ்தலே இவ்வாண்டின் கருப்பொருளாகும். ஏதாவதுதொரு தோல்வியால் ஏற்படும் கவலை, பதட்டம், வெட்கம், குற்ற உணர்வு,  பயம் அன்புக்குரியவரின் மரணத்தினால் ஏற்படும் அதிர்ச்சி, சமூக உறவில் சிக்கல்கள் போன்றன மனநிலையைப் பாதிப்பதும் இந்நோய் வருவதற்கு தூண்டுகோலாக அமையலாம்.

    காதல் தோல்வி, வேலையின்மை, தனிமை, வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத ஏமாற்றங்கள், இழப்புக்கள் முதலிய உளவியல் காரணங்களும் மனநோய்க்கு வித்திடலாம். மேலும் மது, கஞ்சா, போதை மாத்திரைகளின் தொடர் உபயோகம் தொடர்ச்சியான தூக்கமின்மை, உடலியல்சேரும் நட்சுப்பொருட்களினாலும் உளநோய் ஏற்படலாம். கணவன் தனது குடும்பத்தில் அக்கறை காட்டாமை, கணவன் மனைவியரிடை வாழ்வில் ஏற்படும் கசப்புத்தன்மையும் குடும்பம் எனும் பிணைப்பில் தளர்வுகள் ஏற்படுவதும் உளநலப் பிரச்சினைகளே. இவ்வாறான உளநலப் பிரச்சினைகள் அதிகரிக்கின்ற போது தற்கொலை செய்யும் மனோநிலையும் அதிகரிக்கின்றது.

    உளநலமுள்ளவரின் சில குணநலன்கள்

    • உளநலமுள்ளவர்கள் வாழ்க்கையிலும் சாதகமான மனப்போக்கினை கொண்டிருப்பார்கள்.
    • அவர்கள் மிகுந்த நல்லிணக்கம் உடையவராக, பிறரைப்பற்றிக் குறை கூறாமல், மனநிறைவுடையவராக இருப்பார்கள்.
    • தம்முடைய நிறைகளையும் குறைகளையும் அறிந்திருப்பார்கள்.
    • நிலைத்திருக்கக்கூடிய மனவெழுச்சியும், மகிழ்ச்சியும் உடையவராக, நியாய உணர்வும், சகிப்புத்தன்மையும் பெற்றிருப்பர்கள்.

    உளநோய்க்கான அறிகுறிகள்

    • குழப்பமான, உண்மைக்குப் புறம்பான சிந்தனை, தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்
    • காரணம் ஏதுமில்லாமலே சிறிப்பது, அழுவது
    • தொடர்ந்து நெடுநேரம் கவலையாக, சிடுசிடுப்புடன் இருத்தல்.
    • அளவுக்கு அதிகமாகவோ, குறைந்தோ உணர்ச்சியுறுதல்
    • அளவுக்கு அதிகமான அச்சம், கவலை, ஏக்கம், சமூகப் பின்னடைவு, உண்ணுதல், உறங்குதல் வழமைக்கு மாற்றமான நடத்தை, கோபம், மாயக்காட்ச்சிகள, நாளாந்த செயல்களில் சரிவர ஈடுபடமுடியாமை, தற்கொலை எண்ணம், அளவுக்கடந்த கவலையும், குற்ற உணர்வும்.

    உளநலக்காரணிகள்

    1. மரவுநிலைக் காரணிகள்
    2. உடல் சார்ந்த காரணிகள்
    3. சமூக் காரணிகள்

    01. மரவுநிலைக் காரணிகள்
    * ஒருவரின் உளநலம் மரவு நிலையின் நிபந்தனைகளால் வரையறுக்கப்பட்டுள்ளது. ஒரு வரது தோற்றம் , வளர்ச்சி, நுண்ணறிவு போன்றவற்றிக்கான ஆற்றலை நாம் மரவு வழியாகப் பெறுகின்றோம். இந்த ஆற்றலின் வள்ச்சியையும் அதிகம் மரவுகளே தீர்மானிக்கின்றன.

    02. உடல் சார்ந்த காரணிகள்
    * மிகுதியான  வேலை, அல்லது ஓய்வின்மை சோர்வை அளிப்பதால் அது உளநலத்திற்கு கேடு விளைவிக்கின்றது. ஊட்டச்சத்துக் குறைபாடுகளும், சில நோய்களும் ஒத்திசைவுடன் நடந்து கொள்ளும் தன்மையை பாதிக்கின்றன.

    03. சமூகக்காரணிகள்
    *உளநலத்தைப் பாதுகாப்பது அல்லது பாதிப்பதில் வீடு, பாடசாலை, சமூதாயம், போன்ற சமூக்கக் குழுக்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. ஒருவர் தனது அறிவு, திறமைகள், நாட்டங்கள், மனப்போக்குகள், பழக்கங்கள், மதிப்பீடுகள் போன்றவற்றை வளர்த்துக் கொள்ளவும், குறிக்கோள்களை அடையவும், சமூகக்காரணிகள் பெரிதும் உதவுகின்றன.

    உளநோயைத் தடுப்பதற்கான வழிகள்

    உளநோயைத்தடுப்பது அவசியமாகும். முதலாவதாக உளவள ஆலோசகர்கள மூலம் மன நோய்களுக்கான காரணத்தை கண்டறியறிய வேண்டும், அவற்றை நீக்க சிகிச்சை அளித்தல் அடுத்து ஆரோக்கியமான மனநலத்தை வளரக்கூடிய சூழ்நிலைகளை ஏற்படுத்துதல், உளநோய்களைத் தடுப்பதற்கான சமூக சார்புடைய பாதுகாப்பு முறைகளை பயன்படுத்தல்

    உளவள ஆலோசனை அல்லது உதவி மற்றும் வழிகாட்டல் வழங்குவதற்காக கல்முனை பிரதேச செயலகத்தில் உளவள ஆலோசகர்கள் இணைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களின் சேவைகளாவன பிரதேச மட்டத்தில் உளப் பாதிப்புக்குள்ளானவர்களை இணங்கண்டு உளவள முறைமைகள், சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குதல்.

    >றினோஸ் ஹனீபா
    உளவள ஆலோசகர்
    (சிறுவர் விருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சு)
    கல்முனை பிரதேச செயலகம்