Switch Language:   English | தமிழ்


    சென்னையை கலக்கும் மிகப்பெரிய தாதா பிரகாஷ் ராஜ். இவருக்கு மூன்று மகன்கள். மூத்த மகன் அரவிந்த் சாமி, பிரகாஷுடன் இருக்கிறார். இரண்டாவது மகன் அருண் விஜய் துபாயில் தொழில் செய்து வருகிறார். மூன்றாவது மகன் சிம்புவும் வெளிநாட்டில் இருக்கிறார்.

    அஜித் - சிவாவின் கூட்டணியில் வெளியான வீரம், வேதாளம் மற்றும் விவேகம் போன்ற படங்களையடுத்து,  நான்காவது முறையாக விஸ்வாசம் படத்திற்காக இணைந்துள்ளனர். இப்படத்திற்காக முதன் முதலாக இமான் இசையமைக்கிறார். சத்யஜோதி பில்ம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  அத்துடன் பொங்கல் வெளியீடாக இப்படம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.