பயர்பொக்ஸ் பிரவுசரில் இதுவரை இயங்கி வந்த கூகுள் டூல்பார் தற்போது புழக்கத்தில் இருக்கும் பயர்பொக்ஸ் பதிப்பு 5 தொடங்கி இனி வர இருக்கும் பிரவுசர்களில் கிடைக்காது என கூகுள் அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த டூல்பார் மூலம் தான் தானியங்கி மொழி பெயர்ப்பு, கிளவ்ட் புக்மார்க், ஹிஸ்டரி சேவ் செய்தல், தேடல் வசதி போன்றவை பயர்பொக்ஸ் பிரவுசரில் கிடைத்து வந்தன.
இனி இவை பயர்பொக்ஸ் பிரவுசரில் கிடைக்காது. இதற்குக் காரணம் குரோம் பிரவுசரை கூகுள் முன்னுக்குக் கொண்டு வர ஆசைப்படுவதே ஆகும்.
தொழில்நுட்ப ரீதியாக எப்படி வெற்றி பெறுவது என்பதனை கூகுள் நிறுவனத்தினைப் பார்த்துத் தான் கற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு அந்நிறுவனம் வழங்கும் குரோம் பிரவுசரே சாட்சி. இதன் பயன்பாடு தொடர்ந்து அதிக வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகிறது.