Switch Language:   English | தமிழ்

    ஈரான் செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது

    ஈரான் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் செயற்கை கோள்களை தயாரித்து விண்ணில் செலுத்தி வருகிறது. கடந்த 2009 முதல் 2012–ம் ஆண்டு வரை செயற்கை கோள்களை தயாரித்து விண்ணில் செலுத்தி வெற்றி பெற்றது.

     

    இந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் ஒரு செயற்கைகோளை தயாரித்துள்ளது. அது உளவு பார்க்கும் செயற்கை கோளாகும்.

    ஈரான் அதிபர் ரொஹானியின் உத்தரவின் பேரில் உள்நாட்டு தொழில் நுட்பத்திலேயே இது தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கை கோள் பூமிக்கு மேல் 450 கி.மீட்டர் உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

    இந்த தகவலை ஈரான் அரசின் அல்–அலாம் டெலிவிஷன் அதிபர் ஹசன் ரொஹான் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.