Switch Language:   English | தமிழ்

    Micromax அறிமுகம் செய்யும் விண்டோஸ் கைப்பேசிகள்

    Micromax நிறுவனம் விண்டோஸ் 8.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட Canvas Win W121 மற்றும் W092 எனும் இருவகையான ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளது.

    இவற்றுள் Canvas Win W121 கைப்பேசியானது 5 அங்குல அளவுடைய HD IPS தொழில்நுட்பத்தினைக் கொண்ட தொடுதிரையினையும், 1.2GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Quad-Core Snapdragon 200 SoC Processor இனையும் கொண்டுள்ளதுடன், 1GB RAM மற்றும் 8GB சேமிப்பு கொள்ளளவு என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

    இவை தவிர 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்ல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

    இதன் விலை 158 டொலர்கள் ஆகும்.

    Canvas Win W092 கைப்பேசியானது 4 அங்குல அளவுடைய தொடுதிரை, Snapdragon 200 Quad-Core Processor, 1GB RAM, 8GB சேமிப்பு நினைவகம் என்பவற்றுடன் 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா,0.3 மெகாபிக்சலை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

    இதன் விலை இந்திய பெறுமதியில் 6,500 ரூபா ஆகும்.