Switch Language:   English | தமிழ்

    Huawei Ascend P7 அறிமுகம்

    Huawei நிறுவனம் Ascend P7 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை முதன் முறையாக தாய்வானில் அறிமுகம் செய்துள்ளது.

    562 டொலர்கள் பெறுமதியான இக்கைப்பேசியானது 5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டதாகக் காணப்படுகினன்றது.

    மேலும் 1.8GHz வேகத்தில் செயற்படக்கூடிய Quad-Core HiSilicon Kirin 910T Processor, பிரதான நினைவகமாக 2GB RAM சேமிப்பு நினைவகமாக 16GB கொள்ளளவு ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

    இவற்றுடன் 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான 8 மெகாபிக்சல்களை உடைய கமெரா ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.