Switch Language:   English | தமிழ்

    Firefox இணைய உலாவி புதிய வசதியுடன் அறிமுகம்

    உலகில் அதிகளவானவர்களால் பயன்படுத்தப்படும் இணைய உலாவிகளில் ஒன்றான Firefox உலாவியின் புதிய பதிப்பினை Mozilla நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    33.1 வது பதிப்பாக வெளிவந்துள்ள இந்த உலாவியில் இணையத்தேடல்களை பாதுகாப்பானதாக மேற்கொள்ள முடிவதுடன் குக்கீஸ்களை (Cookies) ஒரே ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் நீக்குவதற்கு Forget எனும் பொத்தான் தரப்பட்டுள்ளது.

    இதில் பயனர்களை கண்காணிக்க முடியாது இணையத் தேடல்களை வழங்கும் DuckDuckGo தேடுபொறியினூடாக (Search Engine) இணையத் தேடல்களை மேற்கொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது.