குழந்தையின் படிப்படியான வளர்ச்சி நிலைகள்
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 436
பொதுவாக குழந்தை பிறந்ததிலிருந்து அவர்கள் வளர்ச்சியின் நிலைகள் மாதாமாதம் மாறிக்கொண்டே செல்கிறது.
முதல் மாதத்தில்: சத்தம் வரும் பக்கம் தலையைத் திருப்பும்.
2- வது மாதத்தில்: மற்றவர்களைப் பார்த்து சிரிக்கும்.
3- வது மாதத்தில்: தலை ஆடாமல் நிற்கும், தாயைத் தெரிந்து கொள்ளும், சத்தங்களை எழுப்பும்.
5- வது மாதத்தில்: நன்றாகப் புரளும். மற்றவர்களுடைய உதவியுடன் உட்கார முடியும்.
6- வது மாதத்தில்: தன் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்துச் சிரிக்கும். ‘மா’, ‘பா’ போன்ற ஓர் எழுத்து ஒலிகளை எழுப்பும்.
7- வது மாதத்தில்: மற்றவர்களுடைய உதவி இல்லாமல் உட்காரும்.
8- வது மாதத்தில்: தவழும்.
9- வது மாதத்தில் : மற்றவர்கள் உதவியுடன் நிற்கும் ‘மாமா’, ‘பாபா’ போன்ற இரண்டு எழுத்து சொற்களைச் சொல்லும் ‘டாட்டா’ சொல்லும்.
10- வது மாதத்தில்: மற்றவர்கள் உதவியுடன் தளர்நடை நடக்கும்.
12- வது மாதத்தில்: மற்றவர்களுடைய உதவி இல்லாமல் நிற்கும். அர்த்தம் தரும் இரண்டு வார்த்தைகளைச் சொல்லும்.
13- வது மாதத்தில்: மற்றவர்களுடைய உதவி இல்லாமல் நடக்கும்.
24- வது மாதத்தில்: மாடிப்படி ஏறும், சிறு வாக்கியங்களைப் பேசும்.
36- வது மாதத்தில்: மூன்று சக்கர சைக்கிள் ஓட்டும்.