Switch Language:   English | தமிழ்

    மாணவர்களின் வளர்ச்சியில் விளையாட்டுச் செயல்களின் பங்கு

    விளையாட்டை விரும்பாத குழந்தைகள் உலகில் எக்காலத்திலும் இருந்ததில்லை, இனிமேழும் இருக்க முடியாதென்றே கூறலாம். விளையாட்டு (Play) எல்லா மானவர்களிடமும் காணப்படும் பொதுவான ஒரு பொழுது போக்கு (General Tendency) ஆகும். இப்போக்கு அவர்களிடம் இயல்பாகத் தோன்றும். விளையாட்டு என்பது சிரித்தல் போன்று வேறு வெளிப்பயன் கருதாமல் உடலாற்றலைச் செலவிடும் ஒரு வழியாகும். விளையாடுவது மாணவர்களின் வாழ்க்கைத் தொழில் என்று கூடச் சொல்லலாம்.

    பொதுவாகக் குழந்தைகளின் இயல்புகளை நன்கறிய வேண்டுமாயின் அவர்களது விளையாட்டுக்களை நாம் கூர்ந்து கவனித்தல் அவசியம். விளையாட்டு என்பது வெளித்தூன்டல்களின்றி, மகிழ்ச்சியூட்டும் செயல்களில் இயற்க்கையாகவே ஈடுபடுவதாகும்.

    விளையாட்டும் வேலையும்

    குழந்தைகளின் விளையாட்டு பல்வேறு உருவங்களில் கானப்படுவது குழந்தைப்பருவத்தின் இயல்பாகும. விளையாட்டில் உடல் செயல்கள் மட்டுமன்றி, மனச் செயல்களும் இடம்பெருகின்றன. தம்மையும் மறந்து குழந்கைள் விளையாட்டில் ஈடுபடுவது பொதுவானதாகும். ஏனெனில், விளையாட்டில் குழந்கைளுக்குத் தீவிரக் கவனமும், கவர்ச்சியும் தாமாகவே தோன்றுகின்றன.

    விளையாட்டுக்கும் வேலைக்கும் உள்ள வேறுபாடு புறச்செயலைப் பொருத்ததன்று, அச் செயலை செய்பவனது மனப்போக்கைப் பொறுத்ததாகும். ஒரே செயல், ஒருவனுக்கு விளையாட்டாகவும் மற்றொருவனுக்கு வேலையாகவும் இருக்கக் கூடும். பிறரது கட்டுப்பாடும் கட்டாயமும் இன்றி தனது செயலைத் தேர்ந்தெடுத்து, அதை செய்வதால் தன்னுல் தோன்றும் மகிழ்ச்சிக்காக அவன் அதனைச் செய்வானானால் அச்செயல் அவனுக்கு விளையாட்டாகும். ஆனால், அதே செயலை பிறர் கட்டாயப்படுத்துவதனால் அவன் செய்வானாகின் அவனைப் பொருத்தவரை அச் செயல் வேலை அல்லது தொழிலாகும்.

    இம் மனப்போக்கு அவனை வேலை செய்யத் தூன்டுகின்றது. தொடர்ந்து இவன் வேலை செய்வானாகின் அதுவே நற்பழக்கமாகிவிடும் பின்னர், அவன் சோம்பித் திரிதலைத் தானாகவே வெறுக்கத் தொடங்குவான். இப்பழக்கம் ஒரு மாணவனின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கின்றது.