புற்றுநோய்க்கெதிராக செயற்படக்கூடிய புதுவகை பரம்பரையலகு!
- Editor
- Category: உடல் நலம்
- Hits: 266
இரத்த நாள உற்பத்தியை கட்டுப்படுத்தும் புதுவகை பரம்பரையலகு ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இக்குறித்த பரம்பரையலகு இதய நேய்கள் மற்றும் புற்றுநோய்க்கெதிராக செயற்படக்கூடிய இரசாயனங்களை வழங்குவதாக சொல்லப்படுகிறது.
விஞ்ஞானிகள் மேற்படி பரம்பரையலகின் செயற்பாட்டை வெளிக்கொணர்ந்துள்ளனர். இது குருதிக் குழாய்களின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தி, உடற் கலங்களுக்கும், இழையங்களுக்கும் தேவையான போசணையை வழங்குகின்றது. இச் செயற்பாடு Angiogenesis எனப்படுகிறது.
இதன் மூலம் அங்கங்களையும், இழையங்களையும் உயிர்ப்பாகவும், ஆரோக்கியமானதாகவும் பேணுகின்றது. Wars2 எனும் இப் பரம்பரையலகின் செயற்பாடு எலிகள் மற்றும் ஜீப்ரா மீனில் ஆராயப்பட்டது.இதன் போது அவை இதயம், ஏனைய உடல் பகுதிகளில் குருதி கலன்கள் உருவாக காரணமானது அறியப்பட்டது.
இவ்வகை பரம்பரையலகுகள் அகவணிக் கலங்களின் வழங்கலை கூட்டி மேற்படி Angiogenesis செயற்பாட்டிற்கு வழிவகுக்கிறது.
எனவே, Angiogenesis செயற்பாட்டை கட்டுப்படுத்துவதன் மூலம் குருதிக் கலன்களின் உற்பத்தியை கட்டுப்படுத்துவது மட்டுமல்ல, அவை புற்றுநோய்க்கெதிராகவும் செயற்படுத்தப்படலாம் என்பது விஞ்ஞானிகள் கருத்து.