போட்டோவை ஓவியமாக்க உதவும் Prisma Photo editor app
- MSF.Nadhwa
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 371
ஸ்மார்ட் போனை உபயோகிப்பவர்களில் புகைப்படம் எடுக்காதவர்களே இல்லை. எடுக்கும் புகைப்படத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தி போட்டோ ஷாப் மூலம் எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வர்.
புகைப்படங்களில் ஒரு புதுமையினை விரும்புவர்களுக்கு ஏற்ற ஆப் Prisma Photo editor. இதை அறிமுகப்படுத்திய சில நாட்களுக்குள்ளாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இதனை தரவிறக்கம் செய்துள்ளனர்.
இந்த ஆப் மூலம் எடுக்கும் புகைப்படத்தினை ஓவியம் போன்று எடிட் செய்ய முடியும். புகைப்படத்தினை மட்டுமல்லாது வீடியோவினையும் ஓவியத்தை போன்று எடிட் செய்யலாம்.
இந்த ஆப்-ஐ ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களிலும் பயன்படுத்த இயலும். இந்த ஆப்-ஐ மொபைல் போன் மட்டுமல்லாது விண்டோஸ் இயங்குதளத்தினை கொண்ட கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறை
மொபைலில் ப்ளே ஸ்டோரில் Prisma 3.3 என்னும் பதிப்பினை தரவிறக்கம் செய்து பதிந்து கொள்ள வேண்டும்.
பின், புதிதாக புகைப்படத்தினை எடுத்தோ அல்லது மொபைல் உள்ள புகைப்படத்தினையோ எடிட் செய்யலாம்.
ஆப்-ஐ தரவிறக்கம் செய்த பின் Create என்பதை தேர்ந்தெடுத்து எடிட் செய்ய வேண்டிய புகைப்படத்தினை தேர்ந்தெடுக்க வேண்டும்.
பின் அதை ஓவியத்தினை போன்று மாற்றி கொள்ளலாம். இதே முறையில் வீடியோவினையும் எடிட் செய்ய இயலும்.