உலகில் இருக்கும் எந்த பெரிய நிறுவனமும் அது பெரிய நிறுவனம் என்று சொல்லிக் கொள்ள வேண்டும் என்றால் சைனா அதன் ஒரு முக்கிய அங்கமாக இருக்க வேண்டும். ஓன்று சைனாவில் சொல்லிக் கொள்ளும்படியாக அதன் பொருட்களை விற்க வேண்டும். இல்லை நிறுவனம் விற்கும் பொருட்கள் பெரும்பாலும் சைனாவில் தயாராக வேண்டும். முதலில் சொன்னது சற்றே எளிதான சமாச்சாரம். ஆனால் இரண்டாவது சீனாவில் சைவ சாப்பாட்டை தேடுவது போன்றது. ரொம்பக் கஷ்டம்! அதுவும் அங்கேயே நிறுவனம் நடத்துவது அதை விட கடினமானது! ஏன் அப்படி?சீன விதிகள், அரசாங்க கெடுபிடி, மக்களுக்கு செலவு செய்வதை விட சேமிப்பதில் தான் அலாதிப் பிரியம். அமெரிக்காவைப் போன்ற நுகர்வோர் கலாச்சாரம் கிடையாது, ஏற்றுமதி தான் முதல் குறிக்கோள் என பல காரணங்கள்.