டயட்டில் இருப்பவர்களுக்கு ஓட்ஸ் வெஜ் ஊத்தாப்பம்
- Editor
- Category: சமையல் குறிப்புகள்
- Hits: 339
ஓட்ஸ் உணவில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
இதில் விட்டமின் இ , துத்தநாகம், செலினியம், காப்பர், இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீஸ் போன்றவை காணப்படுகின்றன. இதில் அதிக அளவு புரதமும் உள்ளது.
நீரிழிவு நோயாளிகளும், கொழுப்பு சத்து, உடல்பருமன் கொண்டவர்களும், உயர் ரத்த அழுத்தம் உடையவர்களும் தினசரி ஒரு கப் ஓட்ஸ் உட்கொள்வதன் மூலம் இந்த நோய்களை கட்டுப்படுத்தலாம் என்று உணவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
தினசரி காலை ஒரு கப் ஓட்ஸ் கஞ்சி பருகுவதன் மூலம் அதில் உள்ள நார்ச்சத்து புற்றுநோய் செல்களை அகற்றுகிறது.
இந்த ஓட்ஸ் கொண்டு பல்வேறு வகையான ரெசிப்பிக்களை தயார் செய்யலாம்,
தேவையான பொருட்கள்
தோசை மாவு – 1 கப்
பொடித்த ஓட்ஸ் – 1 கப்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
கேரட் – 1
பச்சை மிளகாய் – 1
கொத்துமல்லி – 1 கைப்பிடி
கறிவேப்பிலை தளிராக – 5 இணுக்கு
பொடியாக அரிந்த பீன்ஸ் 2., குடைமிளகாய் 1/4 பாகம்., முட்டைக்கோஸ் சிறிது – விரும்பினால்.
உப்பு – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 20 மிலி
செய்முறை
வெங்காயம், தக்காளி, கேரட், ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
நறுக்கிய காய்கறிகளை ஒன்றாக கலந்து வைக்கவும்.
தோசை மாவுடன் ஓட்ஸ் பொடியை சிறிது நீரும், உப்பும் சேர்த்துக் கலக்கவும்.
தோசைக்கல்லை காயவைத்து ஒரு கரண்டி மாவை தோசை கல்லில் ஊற்றவும்..
பின்னர் காய்கறிகளை ஒரு கைப்பிடி எடுத்து ஊத்தப்பத்தின் மேல் தூவவும். சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றவும்.
ஒரு மூடியை போட்டு இரண்டு நிமிடம் மூடி போட்டு வேக விடவும். வெந்ததும் திருப்பிவிடவும்.
பொன்னிறமானதும் எடுத்து சுட சுட கொத்துமல்லி, கறிவேப்பிலை சட்னியுடன் பரிமாறவும்.
டயட்டில் இருப்பவர்கள் இதனை சாப்பிடலாம்.