Switch Language:   English | தமிழ்

    ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வது ஆபத்து: ஆய்வாளர்கள் எச்சரிக்கை

    அலுவலகத்தில், வீட்டில்  நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பது ஆபத்து என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

    அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள், அதிக நேரம் கணணி, இணையம் முன்பு செலவிடுவோருக்கு ஏற்படும் உடல்நலக் கோளாறுகள் தொடர்பாக இஸ்ரேல் ஆராய்ச்சியாளர் அமித் கெஃபன் தலைமையில் சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இதில் தெரியவந்த தகவல்கள்: ஒரே நேரத்தில் அதிக நேரம் உட்காரும் போது, ப்ரிடிபோசைட் செல்கள் கொழுப்பு செல்களாக மாற்றம் பெறுகிறது.

    ஒரே இடத்தில் அமரும் போது அழுத்தம் கொடுக்கப்படும் இடங்களில் உள்ள இத்தகைய செல்கள் விரைவாக அதிகரிக்கும். இதனால் அப்பகுதிகளில் கொழுப்பு அதிகரிக்கும். இது மெக்கானிகல் ஸ்ட்ரெச்சிங் லோட்ஸ் எனப்படுகிறது.

    ஒரே இடத்தில் அசைவின்றி வெகு நேரம் உட்கார்ந்திருந்தாலோ, படுத்திருந்தாலோ இந்த பாதிப்பு அதிகம் ஏற்படும். உடலின் மற்ற பகுதிகளைவிட அமரும் இடங்களில் கொழுப்பு செல்கள் சீக்கிரம் அதிகரிக்கும்.

    இதனால் அந்த பகுதியில் மட்டும் அதிக சதை போடும், இதை தவிர்க்க போதிய உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு அவசியம். அது மட்டுமின்றி அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அடிக்கடி எழுந்து நடக்க வேண்டும் என்றார்.