கல்லீரல் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்க இவ் உணவுகளை சாப்பிடுங்கள்
- MSF.Nadhwa
- Category: உடல் நலம்
- Hits: 166
நம் உள்ளுறுப்புகளில் பெரிய உறுப்பாக அமைந்திருப்பது கல்லீரல் தான். இவ் உறுப்பின் பங்களிப்பு அளவிட முடியாதது.
கல்லீரல் தொடர்பான நோய்கள் வந்தால் தோல் மஞ்சள் நிறமாகும், மஞ்சள் காமாலை ஏற்படும், பசியின்மை, அதிகமான சோர்வு, உடல் எடை கூடுதல், வாய் மற்றும் நாக்கில் வரட்சித்தன்மை, அடர்ந்த நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல், வயிற்றுப்போக்கு, மூட்டுகளில் வலி, ஆண்களுக்கு மார்பக வளர்ச்சி, ரத்தம் உறைவதில் பிரச்சனை, நிறம் மாறி மலம் கழித்தல் போன்ற பல அறிகுறிகள் தென்படும்.
இதுபோன்ற பிரச்சனைகளை தடுக்க சில இயற்கையான உணவுகளை அன்றாடம் சாப்பிட்டு வந்தாலே போதும்.
கேரட்:
கேரட்டில் உள்ள மூன்று வகையான அமினோ அமிலங்கள், சிறந்த ஆன்டி- ஆக்ஸிடென்டாக செயல்படுவதால், அது நம் உடலில் நச்சுக்கள் சேர்வதை தடுத்து, விட்டமின் A சக்தியை உடலுக்கு கொடுக்கிறது.
தக்காளி:
தக்காளியில் இருக்கும் எதிர் ஆக்சிகரணி, கல்லீரலில் உள்ள நச்சுப்பொட்ருட்களை வெளியேற்றுவதோடு, புற்றுநோயை எதிர்த்து போராடவும் உதவுகிறது.
திராட்சை:
சிவப்பு திராட்சை பழத்தில் 18 வகையான எதிர் ஆக்சிகரணிகள் இருப்பதால், அது கல்லீரலில் நச்சுத்தன்மையை நீக்கி, நம் உடலுக்கு தேவையான விட்டமின் C-யை கொடுக்கிறது.
பசலைக்கீரை:
கீரை வகைகள் அனைத்துமே நம் உடலுக்கு ஆரோக்கியமானது தான். அதிலும் பசலைக்கீரை நம் உடலில் உள்ள நச்சுக்கழிவுகளை வெளியேற்றி, உடலுக்கு இரும்புச்சத்துக்களை அளிக்கிறது.
முட்டைக்கோஸ்:
முட்டைக்கோஸ் கல்லீரலை சுத்தமாக்கும் தன்மை மற்றும் அழற்சியை எதிர்க்கும் தன்மையைக் கொண்டுள்ளது. அதோடு பல விதமான நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
ஆப்பிள்:
தினமும் ஒரு ஆப்பிள் பழத்தை சாப்பிட்டு வந்தால், அது நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், குடலை சுத்தமாக்கி, கல்லீரலின் வேலையை சுலபமாக்க உதவுகிறது.
பூண்டு:
பூண்டில் சல்ஃபர், அல்லிசென், செலினியம் ஆகிய மினரல்கள் அதிகம் நிறைந்துள்ளது. அவைகள் கல்லீரலை நச்சுக்கள் அண்டாமல் பாதுகாக்கிறது.