நீண்ட நாட்கள் இளமையுடன் இருப்பதோடு, மூட்டு பிரச்சனையே வராது தடுக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்
- Imran
- Category: உடல் நலம்
- Hits: 137
இன்று ஏராளமானோர் மூட்டு பிரச்சனைகளால் அதிகம் கஷ்டப்படுகிறார்கள். இதற்கு கால்சியம் குறைபாடு அல்லது உடலில் கால்சியம் குறைவாக இருப்பது தான் முக்கிய காரணம். இந்த கால்சியத்தை உடல் உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி சத்து மட்டும் தான் அவசியம் என்று பலரும் நினைக்கிறோம்.
ஆனால் வைட்டமின் டி-யைப் போன்று கால்சியத்தை உறிஞ்சுவதற்கு லைசின் என்னும் பொருளும் அவசியமாகும். அது என்ன லைசின் என்று தானே கேட்கிறீர்கள். லைசின் என்பது ஒரு அத்தியாவசியமான அமினோ அமிலமாகும். இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் அவசியமான ஓர் அமினோ அமிலமாகும். இந்த அமினோ அமிலத்தை நம் உடலால் தானாக உற்பத்தி செய்ய முடியாது. இந்த அமினோ அமிலத்தை உணவுகளின் மூலமும், சப்ளிமெண்ட்டுகளின் மூலமும் தான் பெற முடியும். லைசின் கொலாஜன் உற்பத்தியைத் தூண்டும் மற்றும் உடலால் கால்சியத்தை உறிஞ்ச உதவும்.
மேலும் லைசின் ஒருவரது மன அழுத்தம் மற்றும் பதற்றம் போன்றவற்றைக் குறைக்க உதவுவதாக சில ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. சரி, இந்த லைசின் அமினோ அமிலம் எந்தெந்த உணவுகளில் உள்ளது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால், இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.
பர்மேஸன் சீஸ்
புரோட்டீன் நிறைந்த பால் பொருட்களுள் ஒன்றான பர்மேஸன் சீஸில், இந்த லைசின் என்னும் அமினோ அமிலம் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. அதுவும் இந்த வகை சீஸில் ஒரு நாளைக்குத் தேவையான லைசினில் 151% உள்ளது. எனவே இந்த வகை சீஸை அடிக்கடி வாங்கி சாப்பிடுங்கள்.
வறுத்த மாட்டிறைச்சி
வறுத்த மாட்டிறைச்சி சுவையானதாக இருப்பதோடு, புரோட்டீன் நிறைந்ததும் கூட. இந்த மாட்டிறைச்சியில் பல்வேறு அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் அடங்கியுள்ளன. குறிப்பாக இதில் சுமார் 171% லைசின் என்னும் அமினோ அமிலம் அடங்கியுள்ளது
வேக வைத்த சிக்கன் நெஞ்சுக்கறி
வேக வைத்த சிக்கன் நெஞ்சுக்கறியில் புரோட்டீன் ஏராளமான அளவில் உள்ளது. அதே சமயம் இந்த உணவுப் பொருளில் பல்வேறு அத்தியாவசிய அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. அதில் லைசின் என்னும் அமினோ அமிலமும் ஒன்று. அதுவும் இதில் 148% லைசின் அடங்கியுள்ளது.
பூசணி விதைகள்
பூசணி விதைகளில் பழ வகை புரோட்டீன்கள் மற்றும் இதர அத்தியாவசிய அமினோ அமிலங்கள் ஏராளமான அளவில் உள்ளது. அந்த அமினோ அமிலங்களுள் ஒன்று தான் லைசின். பூசணி விதைகளில் சுமார் 67% லைசின் அடங்கியுள்ளது. எனவே அவ்வப்போது ஒரு கையளவு பூசணி விதைகளை சாப்பிடுங்கள்.
வறுத்த சோயாபீன்ஸ்
சோயாபீன்ஸ் மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளுள் ஒன்று. இதில் பெரும்பாலான அத்தியாவசிய அமினோ அமிலங்கள் ஏராளமான அளவில் உள்ளது. மேலும் இதில் தாவர வகை புரோட்டீன்கள் நிறைந்துள்ளது. இந்த உணவுப் பொருளில் 125% லைசின் அடங்கியுள்ளது.