Samsung அறிமுகப்படுத்துகின்றது அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய Galaxy Camera
- MSF.Nadhwa
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 783
இலத்திரனியல் சாதனங்களில் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களுள் ஒன்றான Samsung நிறுவனமானது நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய Galaxy Camera-க்களை அறிமுகப்படுத்துகின்றது.
Android 4.1 Jelly Bean இயங்குதளத்தின் அடிப்படையில் செயற்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ள இக்கமெராக்கள் 1.4GHz வேகத்தில் செயற்படக்கூடிய Processor, 1GB RAM ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
16.3MP வில்லைகளை கொண்டுள்ள இக்கமெராக்கள் 21x Optical Zoom - இனையும் கொண்டுள்ளன.
அத்துடன் இதன் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒன்லைனில் பகிர்ந்து கொள்வதற்கான இணைய இணைப்பினை ஏற்படுத்திக்கொள்வதற்காக SIM Card பயன்படுத்தக்கூடிய Slot ஒன்றும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
__