ஆளி விதையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
- Imran
- Category: உடல் நலம்
- Hits: 221
ஆளி விதைகள் என்பது சிறிய அளவில், ப்ரௌன் நிறத்தில் இருக்கும். இந்த ஆளி விதை ஆசியா, அமெரிக்க, ஆப்ரிக்காவில் பாரம்பரிய உணவுகளில் அதிகம் சேர்க்கப்படும் ஒரு ஆரோக்கியமான மற்றும் ஏராளமான ஊட்டச்சத்துக்களை தன்னுள் கொண்ட பொருளாகும்.
இந்த ஆளி விதையை அப்படியே சாப்பிடலாம் அல்லது பொடியாக்கி உணவுகளின் மீது தூவி சாப்பிடலாம் அல்லது முளைக்கட்ட வைத்தும் சாப்பிடலாம். ஆனால் ஆளி விதையை பொடியாக்கி அல்லது முளைக்கட்ட வைத்து சாப்பிட்டால், அதிலிருக்கும் சத்துக்களை உடலால் முழுமையாக எளிதில் உறிஞ்ச முடியும்.
பலருக்கும் ஆளி விதையை சாப்பிட்டால் நல்லது என்று மட்டும் தான் தெரியும். என்ன நன்மை கிடைக்கும் என்று கேட்டால் தெரியாது. ஆகவே ஆளி விதை சாப்பிட்டால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை முழுமையாக தெரிந்து கொள்வோம்
உட்கொள்ளும் கலோரி அளவைக் குறைக்கும்
ஆளி விதை பல்வேறு டயட் திட்டங்களில் முக்கிய பங்கை வகிக்கிறது. ஏனெனில் இது ஒருவரது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். ஆளி விதையில் உள்ள அதிகளவிலான நார்ச்சத்து, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும் மற்றும் அளவுக்கு அதிகமாக உட்கொண்டு, உடலில் கலோரிகளின் அளவு அதிகரிக்காமல் தடுக்கும்.
புற்றுநோயைத் தடுக்கும்
ஆளி விதையில் உள்ள பைட்டோகெமிக்கல்கள் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்று செயல்பட்டு, புற்றுநோய் தாக்கத்தை எதிர்த்துப் போராடி தடுக்க உதவும். மேலும் இதில் உள்ள லிக்னன்கள், உடலினுள் கெமிக்கல்களால் மாற்றப்பட்டு, உடலில் ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருக்கும். மேலும் இந்த விதைகளில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், மார்பகம், புரோஸ்டேட் மற்றும் குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது
ஏராளமான புரோட்டீன் நிறைந்தது
ஆளி விதையில் அதிகளவில் டயட்டரி புரோட்டீன்கள் நிறைந்துள்ளது. மேலும் இதில் அத்தியாவசியமான அமினோ அமிலங்களும் உள்ளன. எனவே இதை ஒருவர் தினமும் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால், ஒரு நாளைக்கு உடலுக்குத் தேவையான புரோட்டீன் கிடைக்கும்.
இதய நோய்கள் தடுக்கப்படும்
ஆளி விதையில் சி-க்ளுக்கோசைடுகள் வளமான அளவில் உள்ளது. இந்த பாலிபீனோலிக் பொருட்கள் லிப்பிட் பெராக்ஸிடேஷன், பிளேட்லெட் அக்ரேஜேஷன், மற்றும் கேப்பில்லரி ஊடுருவல் மற்றும் பலவீனம் ஆகியவற்றை தடுத்து, இதய நோயின் அபாயத்தைக் குறைக்கும்
சரும பராமரிப்பு
ஆளி விதை எண்ணெய் முகப்பரு, சொரியாசிஸ் மற்றும் எக்ஸிமா போன்ற சரும பிரச்சனைகளை சரிசெய்ய உதவும். அதற்கு ஆளி விதை எண்ணெயை பாதிக்கப்பட்டப் பகுதியில் அன்றாடம் தடவ வேண்டும்.
தலைமுடி பராமரிப்பு
ஆளி விதை எண்ணெய் நகம் மற்றும் தலைமுடி வெடிப்பிற்கு சிகிச்சை அளித்து, நகம் உடைவது மற்றும் தலைமுடி வெடிப்பது போன்றவை தடுக்கப்படும். மேலும் ஆளி விதை எண்ணெய் ஸ்கால்ப்பில் ஏற்பட்ட தொற்றுக்களை எதிர்த்துப் போராட பெரிதும் உதவியாக இருக்கும்.