Switch Language:   English | தமிழ்

    பிறந்து மூன்று நாட்களில் தானாக பால்குடிக்கும் குழந்தை

    பிறந்து மூன்று நாட்களிலிருந்து குழந்தையொன்று கைகளில் புட்டிப்பாலை பிடித்து தானாக பால்குடிக்கும் விநோத சம்பவம் பலரை வியப்பிற்குள்ளாக்கியுள்ளது.

    அமெரிக்காவின், எசெக்ஸ் மாகாணத்தில் வசித்துவரும் ஒனி சியாடோசியா என்ற 20 வயது பெண்ணுக்கு அமரா என்ற பெண் குழந்தை கடந்த 3 ஆம் திகதி பிறந்தது. இக்குழந்தைக்கு தற்போது வயது மூன்று வாரங்களே ஆகின்றன.

    இந்நிலையில் இக்குழந்தை யாருடைய உதவியுமின்றி தானாக புட்டிப்பாலை அருந்துகின்றது. 'நாங்கள் பாலூட்டும்போது அமரா அழத்தொடங்கினாள், உடனடியாக புட்டிப்பாலை கைகளில் பிடித்துகொண்டாள்' என ஒனி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

    'எங்களால் இதனை நம்பமுடியவில்லை. ஏனெனில் அமராவின் வயதுடைய ஏனைய குழந்தைகள் இவ்வாறு செய்வதில்லை. எனக்கும் உண்மையில் வியப்பாக இருந்தது. இதனால் அமராவின் செயற்பாடுகளை புகைப்படங்களாக பிடித்து வருகின்றேன்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    சுமார் 6 இறாத்தல் நிறையுடைய அமரா, ரம்போர்ட் குயின்ஸ் வைத்தியசாலையில் கடந்த 3 ஆம் திகதி பிறந்தார். இந்நிலையில் அமராவின் வளர்ச்சியானது வைத்தியர்களையும் மருத்துவ தாதிகளையும் அதர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது'

    “ஆனால், குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டுவதுதான் சிறந்ததது என என்.சி.டி எனும் தொண்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. புட்டிப்பாலை அருந்தும்போது குழந்தை பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ளகூடும். இது குழந்தையின் உயிருக்கு ஆபத்தாகவும் அமையும்“ என அந்நிறுவனம் எச்சரிக்கை செய்துள்ளது.