கல்வி வழிகாட்டுதலின் அவசியம்
- MSF.Nadhwa
- Category: ஆலோசனை
- Hits: 970
முற்காலப் பகுதியல் பாடசாலைகளின் ஆசிரியர்களது பொறுப்பு, மாணவர்களுக்குக் கற்பித்து, அவர்களின் பொருள் அறிவினைப் பெருக்குவதுடன் மட்டும் நின்றது. இன்று ஆசிரியர்களது பொறுப்புக்கள் விரிவடைந்துள்ளன.
மாணவர்களுக்குத் தேவைப்படும் அறிவுரை பகர்தலும் (Counseling) வழிகாட்டுதலும், (Guidance) இன்றைய கல்வியின் இயல்புகளாகும. மாணவர்களது ஆளுமை இசைந்த முழு வளர்ச்சியைப் பெற வாய்ப்புக்களை அமைத்துத் தருவதே பாடசாலைகளின் இறுதி நோக்கமாகும்.
பாடசாலைக் கல்வியின் அடிப்படை, தொழில் நோக்கமொன்றுதான் என்னும் கருத்தை நாம் முழுமையாக ஏற்கவியலாதெனினும், உயர்நிலைக் கல்வியின் இறுதியாண்டுகளிலேனும் பிற்கால வாழ்க்கைக்கு உதவக்கூடிய தொழில் திறன்களை மாணவர்களிடையே உருவாக்க வேண்டிய தேவையை நாம் ஒதுக்கித் தள்ள முடியாது. இதனால் தொழில் தேர்வுக்கான வழிகாட்டல் தேவைப்படுகின்றது. தமக்கு ஏற்ற பாடங்களையும், பிற்கால வாழ்க்கைக்கான தொழில்களையும் தேர்ந்தெடுத்தல் மாணவர்களுக்கு வெற்றியினை, மனநிறைவினை அளிப்பதோடு, அவர்களது திறன், காலம், சக்தி என்பன வீணாவதை தடுக்கவல்லது.
மாணவர்களது வாழ்க்கையில் தனிப்பட்ட முறையில் எழக்கூடிய பல சிக்கல்களை, பிரச்சினைகளை தீர்க்க அவர்களுக்கு உதவுவதும் ஆசிரியர்களது பொறுப்புக்களாகும். ஏழ்மை, பெற்றோர்களது தவறான மனப்பான்மை, நலமற்ற குடும்பச் சூழ்நிலை, சுற்றுப்புற சூழ்நிலை போன்றவற்றின் விளைவாக இத்தகைய சிக்கல்களும,; பிரச்சினைகளும் எழும். இவை தீர்க்கப்படாவிடில் மாணவர்களது ஆளுமை (Personality) வளாச்சியிலும், கல்வி முன்னேற்றத்திலும் தடைகள் ஏற்படும். எனவே, பாடசாலை கல்வியின் தொடக்கநிலை முதற்கொண்டு இறுதிநிலை
வரை வழிகாட்டலும,; அதனுடன் இணைந்த அறிவுரை பகர்தலும் பாடசாலைக் கல்வியின் இன்றியமையாத பகுதிகளாக இன்று கருதப்படுகின்றது. வகுப்பறைக் கற்றலின் அளவு பல காரணிகளின் இடைவினையினின்றும் எழுவதாகும். இக்காரணிகளுள்:
• ஆசிரியர்; மாணவர்கள் இடையே நிலவும் தொடர்பு.
• வகுப்புக்களின் தன்மை.
• மாணவர்களின் எண்ணிக்கை.
• வகுப்பின் பொதுமனப்பான்மை.
• மாணவர்களிடையே காணப்படும் தொடர்பின் இறுக்கம.;
• மாணவர்களிடையே நிலவும் தலைமையின் தன்மை.
போன்றன வகுப்புக்களின் தன்மையை நிர்ணயிக்கும். அதேநேரம் பாடசாலையில் அமைந்துள்ள வசதிகளின் தன்மை (இடம், கருவிகள்) மாணவர்களைப் பாதிக்கும் வெளிச்சூழ்நிலையின் தன்மை (குடும்பம்,சுற்றுப்புறம்,சமுதாயப்பண்பாடு) போன்றன அடங்கும்.
தொகுப்பு:
றினோஸ் ஹனீபா
PGD in Peace & Conflict Studies (UOC) BSW Special in Counseling(NISD),
Dip in. Professional Counseling (SEUSL)