Switch Language:   English | தமிழ்

    விண்டோஸ் 8‍-ன் Shortcut Keys

    விண்டோஸ் 7 மற்றும் விஸ்டாவிலிருந்து வந்தவர்களுக்கு விண்டோஸ் 8-ல் பல விடயங்கள் புதிதாகவே தெரியும். உங்களுக்காக சில ஷார்ட் கட் கீகள் கொடுக்கப்பட்டுள்ளன.

    Windows Key + X -

    Control Panel, Task Manager, File Explorer and Command Prompt ஆகியவற்றுடன் அடங்கிய மெனு ஒன்று பாப் அப் ஆகி, நாம் தேர்வு செய்திடத் தயாராய் கிடைக்கும்.

    Windows Key + Q

    Application Search Tool ஒன்று நமக்குக் கிடைக்கும். நாம் இன்ஸ்டால் செய்திட்ட அனைத்து சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம்களிலும் நமக்குத் தேவையானதைத் தேடிக் கண்டறியும் திறனை இது வழங்குகிறது.

    Windows Key + C

    விண்டோஸ் 8 சிஸ்டத்தில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள சார்ம்ஸ் மெனு (charms menu) வினை இது தரும்.

    Windows Key + I

    திறந்து பயன்படுத்திக் கொண்டிருக்கும் அப்ளிகேஷனுடைய செட்டிங்ஸ் மெனுவினை அணுக இது அனுமதி தரும். எடுத்துக் காட்டாக, நீங்கள் குரோம் பிரவுசர் திறந்து பயன்படுத்திக் கொண்டிருந்தால், இந்த கீகளை அழுத்துகையில், Internet options செட்டிங்ஸ் மெனுவினை இது தரும்.

    Windows Key + D

    அடிக்கடி பயன்படுத்தும் ஷார்ட் கட் கீ இது. இது டெஸ்க்டாப் நிலையை நமக்குத் தரும். விண்டோஸ் 7 சிஸ்டத்திலும் இதே செயல்பாடு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Windows Key + M

    டெஸ்க்டாப் நிலையைத் தருவதுடன், அதில் அப்போது திறந்து இயங்கிக் கொண்டிருக்கும் விண்டோக்களை மினிமைஸ் செய்வதற்கான திறனைத் தருகிறது.

    Windows Key + Tab

    மேற்கொள்ளும் பல்வேறு அப்ளிகேஷன் பணிகளை மாற்றிக் கொள்ளும் வசதியைத் தரும் பாப் அப் கட்டம் கிடைக்கும்.

    Windows Key + W

    அனைத்து தேடும் பயன்பாட்டினை இயக்குகிறது. search settings அமைத்துத் தருகிறது. இதன் மூலம் பயனாளர் விண்டோஸ் 8 சிஸ்டத்தின் குறிப்பிட்ட அமைப்பினை எளிதாகக் கையாளலாம்.

    Windows Key + F

    அனைத்து தேடும் பயன்பாட்டினை இயக்குகிறது. இங்கு அனைத்து பைல்களைத் தேடும் வாய்ப்பு தரப்படுகிறது. இதன் மூலம் பயனாளர் டாகுமெண்ட், இமேஜஸ், ஆடியோ மற்றும் பிற பைல்களைத் தேடி அறிந்து சேவ் செய்திடலாம்.

    Windows Key + E

    My Computer-> File Explorer பிரிவைக் காட்டுகிறது. இதன் மூலம் ஹார்ட் டிஸ்க்கில் உள்ள அனைத்து ட்ரைவ்களையும் கையாளலாம்.