Switch Language:   English | தமிழ்

    அப்பிளுக்கு போட்டியான MiPad விற்பனையில் சாதனை!

    சீனாவின் அப்பிள் என வர்ணிக்கப்படும் மொபைல் சாதனங்களை உற்பத்தி செய்து அறிமுகப்படுத்தும் Xiaomi நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது.

    இந்நிறுவனம் இந்த ஆண்டின் காலாண்டுப் பகுதியில் 26.1 மில்லியன் ஸ்மார்ட் கைப்பேசிகளை விற்றுத்தீர்த்துள்ளது.

    இதேவேளை Xiaomi நிறுவனத்தினால் சில தினங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட புதிய டேப்லட்டான MiPad அறிமுகம் செய்யப்பட்டு 4 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் 50,000 சாதனங்கள விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இச்சாதனம் அப்பிளின் iPad Mini இற்கு போட்டியாக உருவாக்கப்பட்டுள்ளது.

    இதில் 2.2GHz வேகத்தில் செயற்படக்கூடிய Tegra K1 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM, என்பனவற்றுடன் 16GB மற்றும் 64GB சேமிப்பு நினைவகம் தரப்பட்டுள்ளது.

    இவற்றுடன் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களைக் கொண்ட வீடியோ அழைப்புக்களுக்கான கமெரா ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.

    இவற்றுள் 16GB சேமிப்பு நினைவகத்தினைக் கொண்ட டேப்லட்டின் விலையானது 240 டொலர்களாகவும், 64GB சேமிப்பு நினைவகத்தினைக் கொண்ட சாதனத்தின் விலை 270 டொலர்களாகவும் காணப்படுகின்றது.