Switch Language:   English | தமிழ்

    Software இல்லாமல் உங்கள் File ஐ Lock செய்ய..

    lock

    ஒரு கோப்பை மறைத்து வைப்பதற்கு பல மென்பொருட்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இங்கு எந்த ஒரு மென்பொருளையும் பாவிக்காமல் வெறும் Notepad இனை மாத்திரம் வைத்து ஒரு கோப்பை லாக் செய்ய முடியும்.

    உதாரணமாக உங்களிடம் tamil என்ற கோப்பு இருக்குதெனில் அந்த கோப்பை லாக் செய்வதற்கு பின்வரும் வழிமுறையை பின்பற்றவும்.

    முதலில் ஒரு Notepad ஐ திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும். 

    ren tamil tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}

    பின் அந்த Notepad ஐ lock.bat என பெயர் கொடுத்து Save செய்யவும். பின் இன்னொரு Notepad ஐ த் திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும்.

    ren tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} tamil

    பின் அந்த Notepad ஐ key.bat என பெயர் கொடுத்து Save செய்யவும்.

    இங்கு tamil என்பது நீங்கள் லாக் செய்ய வேண்டிய கோப்பின் பெயர் ஆகும். இனி குறிப்பிட்ட அந்த tamil என்ற கோப்பை லாக் செய்வதற்கு lock.bat என்ற கோப்பை Double Click செய்தல் வேண்டும்.

    லாக் செய்த கோப்பை மீண்டும் Unlock செய்வதற்கு key.bat என்ற கோப்பை Double Click செய்தல் வேண்டும்.

    இதில் கவனிக்க வேண்டிய ஒரு விசயம் நீங்கள் கோப்பை லாக் செய்யும் போது லாக் செய்யும் கோப்பும், lock.bat என்ற கோப்பும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். அதே போல Unlock செய்யும் போது Unlock செய்யும் கோப்பும், key.bat என்ற கோப்பும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும்.

    அந்த key.bat என்ற வேறொரு டிரைவில் சேமித்து விடுங்கள். அந்த கோப்பு இல்லாமல் யாரும் ஓபன் செய்ய முடியாது.