பல பயன்களைத் தரும் திராட்சை!
- MSF.Nadhwa
- Category: உடல் நலம்
- Hits: 744
இருமல், சளியை போக்க கூடியதும், காசநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்டதும், ரத்தத்தை சுத்தப்படுத்த கூடியதும், மூட்டுவலி, மலச்சிக்கலை சரி செய்யவல்லதும், இதயத்தை பலப்படுத்த கூடியதும், நோய் எதிர்ப்பு சக்தி உடையதுமான சிறந்த பழம் திராட்சை. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.
திராட்சையை அடிக்கடி சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. நோய்கள் வராமல் தடுக்கிறது. பச்சை, சிவப்பு, கருப்பு நிறத்தில் திராட்சைகள் உள்ளன. அனைத்து வகை திராட்சையிலும் நன்மைகள் உள்ளன. திராட்சையை பயன்படுத்தி இருமல், சளியை போக்கும் தேனீர் தயாரிக்கலாம்.