அவரைக்காய் தரும் பயன்கள்
- MSF.Nadhwa
- Category: உடல் நலம்
- Hits: 798
பச்சைக்காய்கறிகளை சாப்பாட்டில் சேர்ப்பது ஆரோக்கியத்தை வலுவாக்கும். அந்த வகையான காய்கறிகளில் ஒன்று தான் அவரைக்காய்.
அவரைக்காயில் நிறையப் புரதச்சத்து, குறைவான கொழுப்பு, தேவையான கனிமச்சத்துக்கள் மற்றும் விட்டமின்கள் உள்ளன.
அவரைக்காயின் மகத்துவங்கள்
* அவரைக்காய் பிஞ்சை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறையும்.
* அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும்.
* அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
* இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுவதால், இதனை இரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.
* சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொண்டால், நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை சரியாகும்.
* அவரைக்காய் பொரியல் செய்து சாப்பிட்டால், மலச்சிக்கல் நீங்க, வயிற்றுப் பொருமலை குறையும்.
* இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் எலும்பு பிரச்சனையை வரவிடாமல் தடுக்கும்.
* அறிவுத்திறனை அதிகரிக்க உதவும். மேலும் மூட்டு வலிக்கு அவரைக்காய் பொரியல் சாப்பிடுவது ஒரு சிறந்த மருந்து.