Switch Language:   English | தமிழ்

    நோக்கியா நிறுவனத்தை கொள்வனவு செய்தது மைக்ரோசாப்ட்

    உலகின் முன்னணி மொபைல் நிறுவனமாக திகழ்ந்த நோக்கியா, இனி மைக்ரோசாப்ட் மொபைல் என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது.

    உலகின் முன்னணி மொபைல் நிறுவனமான நோக்கியா, மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் 7.3 பில்லியன் டொலருக்கு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

    இதன்படி இம்மாத இறுதிக்கு பின் நோக்கியா இனி மைக்ரோசாப்ட் மொபைல் என பெயர் மாற்றம் செய்யப்படடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

    கடந்த 2013ம் ஆண்டின் 7.2 பில்லியன் டாலருக்கு இரு நிறுவனங்களும் செய்து கொண்ட ஒப்பந்தம் இம்மாத இறுதியில் முடிவடைவதை அடுத்து இந்த பெயர் மாற்றம் ஏற்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.