Switch Language:   English | தமிழ்

    நிலவில் தரையிறங்கியவுடன் சுயமாக வடிவமைத்து கொள்ளும் முதல் வீடு

    சுவீடன் கலைஞர் ஒருவர் நிலவில் தரையிரங்கியதுடன் சுயமாக வடிவமைத்து கொள்ளும் வீட்டை உருவாக்கி வருகின்றார்.

    கடந்த 2003ம் ஆண்டில் சுவீடன் நாட்டை சேர்ந்த கலைஞரும் தொழிலதிபருமான மைக்கேல் ஜென்பர்க் என்ற நபர் நிலவில் வீடு அமைக்கும் பணியை தொடங்கியுள்ளார்.

    பலரால் நிதியுதிவி பெற்றப்பட்டு வந்த இந்த பணி கடந்த 2010ம் ஆண்டில் பொருளாரதார பிரச்சனையின் காரணமாக பணியை தொடந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

    ஆனால் தற்போது மீண்டும் தொடரப்பட்டுள்ள இந்த வீட்டின் உருவாக்கம் கிட்டத்தட்ட 75 சதவிகிதம் முடிந்துவிட்டதாக கூறப்படுகின்றது.

    கார்பன் கட்டமைப்பின் மீது இதற்கென தயாரிக்கப்பட்ட சிறப்பு துணி கொண்டு இந்த வீடு உருவாக்கப்பட்டுள்ளது.

    மேலும் நிலவில் சென்று இறங்கியவுடன் வாயுவினால் இந்த கூடாரத்தை நிரப்பிய பின்னர் சில நிமிடங்களில் இந்த வீட்டின் கட்டமைப்பு சுயமாக உருவாகிவிடும்.

    சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் செய்யப்பட்டுவரும் இந்த வீடானது சுவீடன் நாட்டில் காணப்படும் சிறிய குடிசை வீட்டை ஒத்திருக்கும்.

    இந்த வீடு மூன்றுக்கு இரண்டு மீட்டர் பரப்பளவும், 2.5 மீ உயரமும் கொண்ட இந்த வீடு வளர்ந்த ஒரு மனிதன் வசிப்பதற்குப் போதுமான இடத்தை கொண்டிருக்கும்.

    இதற்காக சுவிடனின் விண்வெளி பொறியாளர்கள் பல ஆண்டுகளாய் தொடர்ந்து ஆய்வு நடத்தி தங்களது கனவினை நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாய் உள்ளனர்.

    நாசாவையும் தங்களின் தொழில்முறை பங்குதாரர்களாகக் கொண்ட அஸ்ட்ரோபோடிக் என்ற அமெரிக்க விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் இந்த வீட்டை நிலவுக்கு எடுத்துச் செல்ல இணைந்துள்ளது மட்டுமல்லாமல் அடுத்த வருடம் அக்டோபர் மாதம் இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.