Switch Language:   English | தமிழ்

    விண்வெளிக்கு மனிதர்களைக் கொண்டுசெல்லும் நவீன விண்ணோடம்

    கலிபோர்னியாவை தளமாகக் கொண்டியங்கும் ஸ்பேஸ்-எக்ஸ் என்ற நிறுவனம், மீளப் பயன்படுத்தக்கூடிய விண்ணோடம் ஒன்றை தயாரித்துள்ளது.

    சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை கொண்டுசெல்லக்கூடிய இந்த விண்ணோடம், அங்கிருந்து திரும்பிவந்து பூமியில் எந்தவொரு இடத்திலும் மீண்டும் தரையிறங்கக்கூடியது என்று அதன் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

    ட்ராகன் வி-2 என்ற இந்த விண்ணோடம் தரையிறங்குவதற்கு ஓடுபாதை எதுவும் தேவையில்லை. பக்கவாட்டில் பொருத்தப்பட்ட உந்துகருவிகளுடன் தரையிறங்குவதற்கான கால்களும் இதற்கு உண்டு.

    ஏற்கனவே விண்வெளிக்கு பொருட்களைக் கொண்டுசெல்வதற்காக பயன்படுத்தப்பட்ட விண்ணோடத்தின் நவீன ரகமே இந்த ட்ராகன் வி-2 விண்வெளிவீரர்கள் 7 பேரை இந்த வாகனத்தில் கொண்டுசெல்லமுடியும்.

    நாசா மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், அதன் விண்ணோட அணிக்கு ஓய்வுகொடுத்ததிலிருந்து, விண்வெளிவீரர்களை விண்வெளிக்கு கொண்டுசேர்ப்பதில் அந்த நிறுவனம் ரஷ்ய விண்ணோடத்திலேயே தங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.