பேஸ்புக்கில் பணப் பரிமாற்றம் அறிமுகமாகின்றது
- admin
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 812
சமூக வலைத்தளமான வட்ஸ்அப்பினை பேஸ்புக் அண்மையில் கொள்வனவு செய்தது.
அதனைத் தொடர்ந்து பணப் பரிமாற்றல் செவையினையும் விரைவில் அறிமுகப் படுத்த உள்ளதாக பேஸ்புக் அறிவித்துள்ளது.
இன்று இணைய சேவையினை பயன்படுத்தும் 80 சதவீதமானோருக்கு பேஸ்புக் கணக்கு உள்ளது. அது மாத்திரமன்றி போலி கணக்குகளும் இன்று அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றது. அந்த அளவிற்கு கடந்த 10 ஆண்டுகளாக மிகவும் வேகமாக இந்த பேஸ்புக் வளர்ச்சி அடைந்து கொண்டு வருகின்றது.
நித்தம் புதுமையான விடயங்களை அறிமுகப் படுத்திக் கொண்டு வருகின்ற பேஸ்புக் தற்பொழுது பணப் பரிமாற்று சேவையினையும் அறிமுகப் படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலமாக சில வினாடிகளிலேயே பணத்தைப் பெறவும் அனுப்பவும் முடியும் என்று பேஸ்புக் அறிவித்துள்ளது.
இதை செயற்ப்படுத்த அனைவரும் பேஸ்புக் கணக்கினை வைத்திருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த திட்டமானது முதலில் ஐரோப்பிய நாடுகளில் அறிமுகப் படுத்தப்படவுள்ளது. பின்னர் அனைத்து நாடுகளிலும் அமுல் படுத்தப் படும் எனபது குறிப்பிடத்தக்கது.
குறித்த சேவையின் பின்னர் உலகில் யாரும் பேஸ்புக் கணக்கு இல்லாதவர்களாய் இருக்க மாட்டார்கள் என்று நினைக்கின்றோம். பொறுத்திருந்து பார்க்கலாம்.