Switch Language:   English | தமிழ்

    LG G Watch விரைவில் அறிமுகமாகின்றது

    LG நிறுவனம் தனது புதிய G Watch எனும் ஸ்மார்ட் கடிகாரத்தினை அடுத்த வாரமளவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.

    இதன்படி எதிர்வரும் 27ம் திகதி விற்பனைக்கு வரவுள்ள இக்கடிகாரமானது 1.65 அங்குல அளவு, 280 x 280 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் பிரதான நினைவகமாக 512MB RAM மற்றும் சேமிப்பு நினைவகமாக 4GB ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

    மேலும் கூகுளின் Android Wear இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு இக்கடிகாரம் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.