விடுகதைகள்
- Editor
- Category: விடுகதைகள்
- Hits: 374
1. மேலே பூ பூக்கும், கீழே காய் காய்க்கும் – அது என்ன?
- [வேர்க்கடலை]
2. இருட்டில் கண் சிமிட்டும் ஆனால் நட்சத்திரமல்ல – அது என்ன?
- [மின்மினிப் பூச்சி]
3. ஒற்றைக்கால் சுப்பனுக்கு தலைக்கனம் அதிகம் – அவன் யார்?
- [பம்பரம்]
விடுகதைகள்
- Editor
- Category: விடுகதைகள்
- Hits: 1224
1. வகை வகையாய் தெரியும் வண்ணப்படம், கண்மூடிக் காணும் காட்சிப்படம் – அது என்ன?
- [கனவு]
2. மென்மையான உடம்புக்காரன், பாரம் சுமக்கும் கெட்டிக்காரன் - அது என்ன?
- [நத்தை]
3. மூன்றுகால் குள்ள அக்கா, பாரம் தாங்கி, நெருப்பை சுமந்து சோறு சமைப்பாள் – அவள் யார்?
- [அடுப்பு]
விடுகதைகள்
- Editor
- Category: விடுகதைகள்
- Hits: 2291
1. மணம் இல்லாத மல்லிகை மாலையில் மலரும் அது என்ன?
-தீபம்
2. அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் அது என்ன?
-நிலா
3. மண்ணுக்குள் இருக்கும், மங்கைக்கு அழகு தரும் அது என்ன?
-மஞ்சள்
4. இரவும் பகலும் ஓய்வு இல்லை, படுத்தால் எழுப்ப ஆள் இல்லை அது என்ன?
-இதயம்
விடுகதைகள்
- MSF.Nadhwa
- Category: விடுகதைகள்
- Hits: 5841
விடுகதைகள்
Part - 01
01)அரைச்சாண் ராணி,அவளுக்குள்ளே,ஆயிரம் முத்துக்கள் அது என்ன ?
02)இத்தணூன்டு சிட்டுக்குருவிக்கு, ஏழு முழம் சித்தாடை அது என்ன?
03)எட்டுக்கால் ஏகாம்பரம்,வலை பின்னுவதில் கெட்டிக்காரன் அவன் யார்?
04)எண்ணைய் வேண்டா விளக்கு,எரியும் போதே உருகும் விளக்கு
அது என்ன?
Page 3 of 3