விடுகதைகள்
- MSF.Nadhwa
- Category: விடுகதைகள்
- Hits: 5841
Article Index
விடுகதைகள்
Part - 01
01)அரைச்சாண் ராணி,அவளுக்குள்ளே,ஆயிரம் முத்துக்கள் அது என்ன ?
02)இத்தணூன்டு சிட்டுக்குருவிக்கு, ஏழு முழம் சித்தாடை அது என்ன?
03)எட்டுக்கால் ஏகாம்பரம்,வலை பின்னுவதில் கெட்டிக்காரன் அவன் யார்?
04)எண்ணைய் வேண்டா விளக்கு,எரியும் போதே உருகும் விளக்கு
அது என்ன?
05)ஓடியாடி உழைத்தும், மூலைதான் இவன் இருப்பிடம் அது என்ன?
06)பூக்காமல் பூத்திருப்பாள்,தெரியாமல் மறைந்திருப்பாள் அவள் யார் ?
07)மரத்துக்கு மரம் தாவியோடும்,முத்தம்மா மகனுக்கு முதுகிலே
மூன்றுகோடு, அது என்ன ?
08)விரித்தால் நாம் தூங்கலாம், சுருட்டினால் அது தூங்கும் அது என்ன ?
09)ஒரு மழை பெய்தாலே பல குடை வந்துவிடும் அது என்ன ?
10)குண்டுச் சட்டியில் கெண்டை மீன், அது என்ன ?
விடைகள்
********
10. நாக்கு
09. காளான்
08. பாய்
07. அணில்
06. அத்திப்பூ
05. துடைப்பம்
04. மெழுகு வர்த்தி
03. சிலந்தி
02.வெங்காயம்
01. வெண்டைகாய்