Switch Language:   English | தமிழ்

    பூமியின் கீழ் ஆழமான பகுதிகளில் வாழும் உயிரினம்: ஆச்சரியத்தின் உச்சத்தில் விஞ்ஞானிகள்

    ஒளித்தொகுப்புச் செய்யும் சயனோ பற்றீரியா பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

    இவை பொதுவாக சூரிய ஒளியுள்ள இடங்களை அண்டியே வாழ்கின்றன.

    ஆனால் தற்போது நிலத்தின் கீழாக 613 மீட்டர்கள் ஆழத்தில் இவை கண்டறியப்பட்டிருப்பது விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது.

    இவை எவ்வாறு சூரிய ஒளியே இல்லாத அத்தகைய ஆழத்தில் வாழமுடியும்?

    ஆம், இவை சூரிய ஒளி மற்றும் ஒட்சிசன் இல்லாதபோது தமது சக்தித் தேவைக்காக ஜதரசனைப் பயன்படுத்திக் கொள்கின்றன.

    அதாவது பல்வேறு இலத்திரன் வாங்கிகள் கொண்ட தொடரினூடு ஜதரன் அணுவிலுள்ள இலத்திரனைக் கடத்துவதன் மூலமாக தமக்குத் தேவையான சக்தியை அவை பெற்றுக்கொள்கிள்றன.

    ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானியான Fernando Puente-Sánchez என்பவர் 613 மீட்டர் ஆழத்திலிருந்து பெற்ற பாறை மாதிரிகளை ஆராய்ந்ததிலேயே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.