Switch Language:   English | தமிழ்

    கண்டுபிடிக்கப்பட்டது மற்றுமொரு ரகசியம் : உணவின் சுவையை அறிவது நாக்கு மட்டுமல்ல

    பொதுவாக உமிழ்நீரில் அதிகமாக நீர் காணப்படுகின்றது. இது ஏறத்தாழ 95.5 வீதம் ஆகும்.

    ஆனால் மிகுதி 4.5 வீதமும் முக்கியமான இரசாயனக் கூறுகளைக் கொண்டுள்ளது.

    இந்த இரசாயனக்கூறுகள் உணவை சிறு துகள்கள் ஆக்குவதில் பங்களிப்புச் செய்வதுடன், பற்களையும் பாதுகாக்கின்றது.

    மேலும் உமிழ்நீர்ச் சுரப்பிகள் விடுவிக்கும் புரத மூலக்கூறுகள் உணவிலுள்ள சுவைக்குப் பொறுப்பான மூலக்கூறுகளுடன் இணைந்து, நம் வாயில் காணப்படும் வாங்கிக் கலங்கள் சுவையை உணர உதவுகின்றன.

    இதனால்தான் உமிழ்நீரானது “வாயின் இரசாயன ஊடகம்” எனப்படுகிறது.

    இங்கு முக்கிய விடயம் யாதெனில் இந்த புரதங்கள் நிலையற்ற புரதங்கள், உண்ணும் உணவிற்கேற்ப இப் புரதங்களின் செயற்பாடும் மாறுபடுகிறது.

    எலிகள் மீதான ஆய்வொன்று, இப்புரதம் மாற்றியமைக்கப்பட்ட போது அவை அதிகளவான கசப்புத் தன்மையுள்ள உணவை உட்கொண்டிருந்தமையைச் சுட்டிக் காட்டியிருந்தது.

    எனவே இப் புரதங்களின் செயற்பாட்டை மாற்றுவதன் மூலம் உணவின் கசப்புத் தன்மையை இல்லாதொழிக்கலாம் என்பது ஆய்வாளர்களின் நம்பிக்கை.

    அப்போ, கசப்புத் தன்மைமிக்க உணவில் குறைபட்டுக் கொள்வது எந்த வகையில் நியாயம்?

    அப்போ, கசப்புத் தன்மைமிக்க உணவில் குறைபட்டுக் கொள்வது எந்த வகையில் நியாயம்?