STR 50 படத்தில் காத்திருக்கும் சப்ரைஸ்...தனுஷை பின்பற்றும் சிம்பு!
- MSF.Nadhwa
- Category: சினிமா
- Hits: 93
நடிகர் சிம்புவின் 48 படத்தை இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளார். அதன் தொடர்ச்சியாக தற்போது STR 48 படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தை தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளார்.
பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தை உலக நாயகன் கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்காக சிம்பு உடல் எடையை குறைத்து ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்து வருகிறார்.
STR 48 படத்தின் ஷூட்டிங் வருகிற ஜனவரி மாதம் தொடங்கும் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
தற்போது நடிகர் தனுஷ் அவரது 50 படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இதே போல சிம்புவும் தனது 50 படத்தை இயக்கி ஹீரோவாக நடிக்க திட்டமிட்டுள்ளாராம். அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.