Switch Language:   English | தமிழ்

    ஒலியை விட 5 மடங்கு கூடுதல் வேகத்துடன் விண்வெளிக்கு செல்லும் அதிவேக ராக்கெட்!

    ஒலியைவிட 5 மடங்கு கூடுதல் வேகத்துடன் 15 நிமிடத்தில் விண்வெளிக்கு செல்லும் அதிநவீன ராக்கெட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து அனுப்பபடும் ராக்கெட்டுகள் விண்வெளியை அடைய அதிக நேரம் ஆகிறது.

    ஆனால், அது 15 நிமிடத்தில் விண்வெளியை சென்றடையும் விதத்தில் அதிநவீன ராக்கெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

    இதற்காக சக்தி வாய்ந்த என்ஜினை இங்கிலாந்து தயாரித்துள்ளது. இதை சாதாரண விமானங்கள் புறப்படும் ஓடுதளத்தில் இருந்தே இயக்க முடியும். இந்த ராக்கெட் ஒலியைவிட 5 மடங்கு கூடுதல் வேகத்தில் இயங்க கூடியது. மணிக்கு 19 ஆயிரம் மைல் (30,577 கி.மீ) வேகத்தில் பாய்ந்து செல்லத்தக்கது.

    இதில், இங்கிலாந்தில் வடிவமைக்கப்பட்ட ‘சாப்ரீ’ ரக என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது ஆளின்றி இயங்க கூடியது. மிகவும் எடை குறைந்தது. இது 15 டன் எடையை சுமந்து செல்லக்கூடிய திறன் கொண்டது.
    இதில் உள்ள ‘சாப்ரீ’ என்ஜின் இயங்க திரவ ஹைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது. இது காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் சேர்ந்து எரிபொருளாக பயன்படுகிறது.