Switch Language:   English | தமிழ்

    நோயின்றி ஆரோக்கியமாக வாழ தினமும் கடைபிடிக்க வேண்டியவை...

    வாழ்நாள் முழுவதும் நோயில்லாமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள் சில செயல்களைப் பற்றி பார்ப்போம்.

    தினமும் கடைபிடிக்க வேண்டிய செயல்கள்

    • காலையில் எழுந்தவுடன் உங்கள் கைளை நீட்டுவீர்கள் முதுகை பின்புறம் வளைத்து கழுத்தினை இருபுறமும் சில நிமிடங்கள் திருப்புவதின் மூலம் உடலில் ரத்த ஓட்டம் சீராகி முதுகு வலியினை நீக்கும்.

    • சாப்பிடும் போது சாப்பாட்டில் கவனத்தை வைக்க வேண்டும். நம் பார்வையும் கவனமும் வேறு எங்கும் இல்லாமல் உணவை உற்று நோக்கி சாப்பிடவேண்டும்.

    • உணவு உண்ணும்போது மன உளைச்சல், சண்டை, கோபம் போன்ற உணர்ச்சிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    • தினமும் உங்கள் ஆன்மாவோடு அல்லது உங்கள் மனதோடு பேசுங்கள், இப்படி தினமும் பேசுவதின் மூலம் உங்களின் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

    • உணவு, உறக்கம், உழைப்பு, ஓய்வு, உடற்பயிற்சி, உறவு ஆகியவை சரியாக வைத்திருப்பதே உடல்நலத்திற்கு மிக முக்கிய காரணியாகும்.

    • 20 வயதிற்குப் பிறகு மருத்துவ ஆலோசனை படி உங்களுக்குத் தேவையான வைட்டமின்களை அவசியம் எடுத்துக் கொள்ளுங்கள்.

    • தினமும் உண்ணும் உணவில் மிளகு, பட்டை, வெங்காயம், பூண்டு, வெங்காயத்தாள் இவற்றினை முடிந்தவரை அடுப்பில் சமைக்காது எடுத்துக் கொள்வது மிக நல்ல பலனை அளிக்கும்.

    • தக்காளியில் உள்ள லைகோபேன் புற்று நோயையும் எதிர்க்கும் சக்தி படைத்தது. மேலும் இதில் வைட்டமின் சி நிறைந்தது, எனவே தினமும் இரண்டு தக்காளியினை முடிந்தவரை சமைக்காத உணவாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

    •  நார்ச்சத்து மிகுந்த தானியம், கொட்டைவகைகள், வாழைப்பழம் இவை மூளையில் செரடோனின் சுரக்கச் செய்யும். செரடோனினே ஒருவரை நல்ல ஆக்க உணர்வாக இருக்க செய்யும்.

    • படுக்கையில், தலைமாட்டில் செல்போன் போன்ற கதிர்வீச்சுக்கள் உள்ளவற்றை வைத்துக்கொள்ளாமல், வேறு அறையில் அல்லது தூரத்தில் வைத்துவிட வேண்டும்.

    • தினமும் அரை மணி நேரமாவது நடக்க வேண்டும் அல்லது தினமும் சில நிமிடங்கள் நன்கு வேகமாக நடக்க வேண்டும்.

    • அதிக வெள்ளைப் பொருட்களை தவிர்ப்பது நல்லது என்று பரிந்துரைக்கின்றனர். அரிசி, மாவு, சர்க்கரை இவற்றினை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள்.

    • 40 வயதினை கடந்தவர்கள் வைட்டமின் டி தேவையா என்பதினை அறிந்து எடுத்துக் கொள்ளுங்கள். சாப்பிட்டவுடன் ஸ்வீட் சாப்பிடும் பழக்கத்தினை விட்டு விடுங்கள்

    • 10-15 நிமிடங்கள் வரை காலை அல்லது மாலை சூரிய ஒளி உடலில் பட வேண்டும்.காலை அரிசி உணவு, மதியம் அரிசி உணவு, இரவு அரிசி உணவு என்று இல்லாமல் பல வகை உணவுகளை மாற்றி மாற்றி எடுத்துக் கொள்ளுங்கள்.