Switch Language:   English | தமிழ்

    2015 இல் மலேரியா தடுப்பு மருந்து வரும் வாய்ப்பு.

    மலேரியாவுக்கன தடுப்பு மருந்து குறித்த புதிய சோதனைகள் சிறார்களில் அந்த நோய் தொற்றுவதை அது கணிசமாகக் குறைத்துள்ளதாகக் காண்பிக்கின்றன.

    7 ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள 11 ஆய்வு நிலையங்களில் நடத்தப்பட்ட அந்த சோதனைகள், இளம் சிறார்களில் கிட்டத்தட்ட அரைவாசியாக அந்த நோயைக் குறைத்துவிட்டன. குழந்தைகளில் 25 வீதத்தால் நோய் குறைந்துவிட்டது.

    பாத் மலேரியா இனிசியேட்டிவ் என்னும் அமைப்புடன் சேர்ந்து இந்த தடுப்பு மருந்தை தயார் செய்த பிரிட்டனின் கிளாஷோ சிமித் கிளைன் மருந்து நிறுவனம், அடுத்த வருடம் இந்த மருந்துக்கான அனுமதியை ஒழுங்குபடுத்துனர்களிடம் கோரப்போவதாகவும், 2015 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் அதற்கான அனுமதி கிடைக்கலாம் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளது.

    கொசுவினால் கடத்தப்படும் இந்த நோயினால் வருடாந்தம் 6 லட்சம் பேர் இறக்கிறார்கள்.