Switch Language:   English | தமிழ்

    சூரியனில் புயல் உருவாகியுள்ளது: இன்னும் மூன்று நாட்களில் பூமியை வந்தடையும்

    சூரியனில் புயல் உருவாகியுள்ளது என்றும், இன்னும் மூன்று நாட்களில் அதன் வெப்பத் துகள்கள் பூமியை வந்தடையும் என்றும், அதனால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் நாசா விஞ்ஞானிகள் தகவல் அளித்துள்ளனர்.

    இதற்கு முன்னர் சூரியனில் புயல் உருவாகிய போது, அதன் நெருப்புத் துகள்கள் பூமிக்கு வருவதற்குள், வலிமண்டலத்தில் கரைந்து போய்விடும் என்பதால், பூமிக்கோ, மக்களுக்கோ ஆபத்து எதுவும் நேர்ந்ததில்லை.

    ஆனால், இப்போது சூரியனில் இருந்து விழும் துகள்கள் மணிக்கு 33லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி விழும் என்பதால், வலி மண்டலத்தில் இந்த துகள்களின் வெப்பம் முற்றிலுமாக கரைந்துவிட வாய்ப்பில்லை என்றும், பூமியை நோக்கி வர 3 நாட்களாகும் என்றும்  கூறியுள்ளது.

    மேலும், இந்த துகள்களால் மக்களுக்கு ஏதும் பாதிப்பில்லை என்றாலும், தகவல் தொழில் நுட்பம், தகவல் தொடர்புத் துறை ஆகியவை முடங்கும் அபாயம் ஏற்படும் என்றும் நாசா விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர்.