Switch Language:   English | தமிழ்

    மருந்து கண்டுபிடிப்பு: குடல் புற்றுநோயின் வீரியத்தை குறைக்கும்..

    உலகம் முழுவதிலும் புற்றுநோய் வேகமாக பரவி வரும் நோய்களில் ஒன்றாக மாறி வருகின்றது.

    குடல் புற்றுநோயினால் மட்டும் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இந்த நோய்க்கு மருந்து மாத்திரை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

     

    இந்நிலையில் தற்போது குடல் புற்றுநோயின் வேகத்தை குறைக்க நிபுணர்கள் புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளனர்.

    அப்ளி பெர் செட் என பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து புற்றுநோய் செல்கள் மேலும் பரவாமல் தடுக்கிறது. இதன் மூலம் புற்றுநோயின் வீரியம் குறையும்.

    இங்கிலாந்தில் உள்ள 1400 நோயாளிகளிடம் சோதனை நடத்தப்பட்டதாகவும், அதில் நல்ல பலன் கிடைத்ததாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் சாப்பிட்ட 30 நிமிடத்தில் இந்த மருந்து செயல்பட தொடங்கும் என்றும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

    இதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும் எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.