Breaking News
Android Message சேவையில் புதிய வசதி!
- Imran
- Category: தகவல் தொழில்நுட்பம்
- Hits: 105
இணைய உலாவியின் ஊடாக குறுஞ்செய்தி அனுப்பும் வசதியினை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இதற்காக Android Message எனும் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் மொபைல் சாதனங்களைப் பயன்படுத்தி குறுஞ்செய்திகளை அனுப்பக்கூடிய அப்பிளிக்கேஷன்கள் காணப்பட்டன.
ஆனால் இப் புதிய வசதி ஊடாக கணினிகளிலில் இருந்து மொபைல் சாதனங்களுக்கும், மொபைல் சாதனங்களில் இருந்து கணினிகளுக்கும் குறுஞ்செய்திகளை அனுப்ப முடியும்.
இதன் ஊடாக எழுத்துருக்கள் மாத்திரமன்றி புகைப்படங்கள், ஸ்டிக்கர்கள் என்பவற்றினையும் அனுப்ப முடியும். இவ் வசதியினைப் பெறுவதற்கு https://messages.android.com இணையத்தளத்திற்கு சென்று மொபைலில் QR குறியீட்டினை ஸ்கான் செய்ய வேண்டும்.